தை அமாவாசை 2024 : தமிழகம் முழுவதும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க புனித நீர்நிலைகளில் குவிந்த மக்கள்..

By Ramya sFirst Published Feb 9, 2024, 8:41 AM IST
Highlights

தை அமாவாசையான இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்ற

அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய விரதநாளாகும். அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வந்தாலும், ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை. இந்த நாளில் முன்னோர்களை வழிபட்டால் முன்னோர்களின் ஆசியை பெற முடியும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதத்தில் வரும் இந்த அமாவாசையில் கங்கையில் நீராடுவதும், அன்னதானம் செய்வதும் சிறப்பு.

அமாவாசை அன்று சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரை, மகாநதிகள், ஆறுகள், குளங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும்.முன்னோர்களை வழிபட்ட பின்னரே பூஜைகளை செய்ய வேண்டும். சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு மற்ற கேளிக்கைகளை தவிர்க்க வேண்டும். மேலும் பிரம்மாச்சாரிகள், சாதுக்கள், வைஷ்ணவர்கள், துறவிகள் ஆகியோருக்கு அன்னதானம் வழங்கினால் யாகத்திற்கு இணையான பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

Latest Videos

தை அமாவாசை 2024: இந்த 3 பேருக்கு மட்டும் தானம் கொடுங்க... மகத்தான ஆசீர்வாதங்கள் கிடைக்கும்!!

அந்த வகையில் தை அமாவாசையான இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இன்று ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், வேதாரண்யம், ஸ்ரீரங்கம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கள் முன்னோர்களுக்கு பலரும் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அதன்படி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீராடி, ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 12 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். மேலும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். 

இதே போல் கன்னியாகுமரியில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த திரளான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். நாகை வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முதலே ஏராளமானோர் புனித நீராடி பித்ருக்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர்.

Thai Amavasai 2024 : தை அமாவாசை அன்று இதையெல்லாம் கட்டாயம் மறக்காமல் செய்யுங்கள்!!

மேலும் ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை, திருவையாறு, பூம்புகார் போன்ற இடங்களிலும் பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

click me!