குடும்ப ஆட்சிக்கு முடிவு.. தடைகளை மக்கள் ஆதரவுடன் முறியடிப்பார் அண்ணாமலை - எ.என்.எஸ் பிரசாத் அறிக்கை!

By Ansgar R  |  First Published Feb 8, 2024, 9:26 PM IST

K. Annamalai : எத்தனை தடைகள் விதித்தாலும் அதை மக்கள் ஆதரவுடன் தமிழகத்தின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முறியடிப்பார் என்று கூறியுள்ளார் பிரசாத்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் தமிழகத்தின் ஊழல், குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டவும், தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம்தான் என்பதை உரக்கச் சொல்லவும் கடந்த 2023 ஜூலை 29-ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இதுவரை 189 சட்டப்பேரவைத் தொகுதிகளில் யாத்திரையை வெற்றிகரமாக முடித்துள்ளார்.அதற்கு தமிழக மக்களிடம் கிடைத்து வரும் பெரும் ஆதரவும், அண்ணாமலைக்கு அதிகரித்து வரும் மக்கள் செல்வாக்கும் தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகளுக்கு பீதியை கிளப்பியுள்ளது.

Tap to resize

Latest Videos

மாநாட்டுக்கு தயாராகும் தளபதி! தேர்தலில் களம் காண இந்த இரண்டில் ஒரு தொகுதி தான்விஜய்யின் டார்கெட்!

அதனால், என் மண், என் மக்கள் யாத்திரைக்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் தொந்தரவு கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு தொந்தவரவுகளை கொடுத்து வருகின்றனர். அவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் யாத்திரையை வெற்றிகரமாக அண்ணாமலை நடத்தி வருகிறார்.

'என் மண், என் மக்கள்' யாத்திரை பிப்ரவரி 11-ம் தேதி தலைநகர் சென்னைக்கு வருகிறது. அதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார். ஆனால், அண்ணாமலையின் யாத்திரைக்கு திமுக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. அதற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என காரணம் கூறியுள்ளனர். ஆனால், திமுகவினர் பேரணி, ஊர்வலம் நடத்த காவல் துறை எந்தத் தடையும் இல்லாமல் அனுமதி அளிக்கிறது.

பிப்ரவரி 1-ம் தேதி ராயபுரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக மாணவரணி பேரணி நடத்தியது. இதில் திமுகவின் பட்டத்து இளவரசரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , பிரிவினைவாத சக்திகள் பங்கேற்றனர். மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றும் போராட்டத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்து சட்டத்திற்கு புறம்பாக அனுமதி அளித்தது ஏன்?

ஆனால், அண்ணாமலை யாத்திரை நடத்த மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஏன்? சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என திமுக அரசு நினைக்கிறது.

யாத்திரைக்கு எத்தனை தடைகள் விதித்தாலும் மக்கள் ஆதரவுடன் அதை அண்ணாமலை அவர்கள் முறிடியப்பார். திமுக அரசின் அடக்குமுறைகளால் கொள்கையே உயிரென வாழும் பாஜகவினரை அடக்கி ஒடுக்கி விட முடியாது. எனவே, சென்னை மாநகரில் 'என் மண், என் மக்கள்' யாத்திரைக்கு திமுக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார். 

உங்கள் ஆட்சியின் கடைசி காலத்திலாவது எங்களுக்கான நிதியை வழங்குங்கள் - மத்திய அரசுக்கு உதயநிதி கோரிக்கை

click me!