2025க்குள் ஐந்து 400V ஆக்டிவ் எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கும் டாடா மோட்டார்ஸ்!

By SG Balan  |  First Published Jan 6, 2024, 10:07 PM IST

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து வரவிருக்கும் அனைத்து எலக்ட்ரிக் கார்களிலும் இந்த ஆக்டிவ் அமைப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மின்சார கார்களிலும் இந்த அம்சம் இருக்கும்.


டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் அதிவேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகன சந்தையில் முன்னிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் மற்றொரு திட்டத்தை வைத்திருக்கிறது. இந்நிறுவனம் பிரத்யேகமாக மின்சார வாகனக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறது.

ஆக்டிவ் (acti.ev) என்று அழைக்கப்படும் இந்தக் கட்டமைப்புடன் முதல் முதலில் வெளியாக இருக்கும் எலெக்ட்ரிக் கார் டாடா பஞ்ச் EV. இது வரும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது டாடாவின் எதிர்கால எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.

Latest Videos

undefined

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து வரவிருக்கும் அனைத்து எலக்ட்ரிக் கார்களிலும் இந்த ஆக்டிவ் அமைப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் கார்வ் (Curvv), சியாரா (Sierra) மற்றும் ஹாரியர் (Harrier) மின்சார கார்களிலும் இந்த அம்சம் இருக்கும்.

தமிழ்நாட்டில் 16,000 கோடி முதலீடு செய்யும் வின்ஃபாஸ்டு நிறுவனம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

மேலும் 2025ஆம் ஆண்டிற்குள் குறைந்தது ஐந்து கார்கள் ஆக்டிவ் (acti.ev) அமைப்புடன் வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள எஞ்சின்களில் இருந்து இது மாறுபட்டது என்பதால், ஆக்டிவ் கட்டமைப்புடன் கார்களை உருவாக்க புனேவில் உள்ள உற்பத்தி ஆலையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை தலைவர் ஆனந்த் குல்கர்னி கூறுகிறார்.

ஆக்டிவ் (Acti.ev) கட்டமைப்பு என்பது 400V எஞ்சின் கொண்டதாக இருக்கும். டாடாவின் வரவிருக்கும் 'அவின்யா' சீரிஸ் பிரீமியம் எலெக்ட்ரிக் கார்களில் 800V எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த ஆக்டிவ் கட்டமைப்பில் பேட்டரி ஆற்றல் 10 சதவிகிதம் அதிகரிக்கும் என்று டாடா கூறுகிறது. உட்புற வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் முன்புறத்திலும் மாறுதல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

நீளத்திலும் பெரிய அளவில் மாறுதல் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. காரின் அகலத்தையும் 250 மிமீ வரை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்த்தோகனல் பேட்டரி கொண்டிருப்பதால் 300 முதல் 600 கிலோமீட்டர் ரேஞ்ச் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 11 kW வரை ஆன்போர்டு AC ஃபாஸ்ட்-சார்ஜிங் மற்றும் 150 kW வரை DC ஃபாஸ்ட்-சார்ஜிங் வசதி இருக்கக்கூடும்.

Watch: நடுவானில் கழன்று விழுந்த கதவு! அவசரமாகத் தரையிறங்கிய அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம்!

click me!