எல் 1 புள்ளியை வெற்றிகரமாக அடைந்த ஆதித்யா எல் 1 விஞ்ஞானிகளின் சாதனை ஈடு இணையற்றது - ராமதாஸ் பாராட்டு

By Velmurugan sFirst Published Jan 6, 2024, 6:08 PM IST
Highlights

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக எல் 1 புள்ளியை சென்றடைந்த நிலையில் இந்திய அறிவியலாளர்களின் சாதனை ஈடு இணையற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சூரியனை ஆய்வு செய்வதற்கான இஸ்ரோவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்1 பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்1 புள்ளியை வெற்றிகரமாக அடைந்துள்ளது. சந்தியாரன்-3 வெற்றியைத் தொடர்ந்து இது இஸ்ரோவின் மற்றொரு சாதனையாக அமைந்துள்ளது. இஸ்ரோவின் இந்த சாதனைக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நெல்லை - திருச்செந்தூர் இடையே நாளை முதல் ரயில் போக்குவரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

Latest Videos

அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து  கடந்த செப்டம்பர் 2-ஆம்  நாள் பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் 125 நாள் பயணத்திற்குப் பிறகு, பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில்  உள்ள எல் 1 புள்ளியை அடைந்து ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது.  இந்தியாவின் விண்வெளி ஆய்வு பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்.  இதற்கு காரணமான இஸ்ரோ அமைப்புக்கும், அதன் விஞ்ஞானிகளுக்கும் எனத்  வாழ்த்துகளையும், பாராட்டுகளையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

வீட்டில் செல்வம் பெருக வேண்டும்; ரூபாய் நோட்டுகளால் அலங்கறிக்கப்பட்ட அம்மனை வழிபட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்

சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவை வென்ற நமது அறிவியலாளர்கள் இப்போது ஆதித்யா எல் 1  திட்டத்தின் மூலம் சூரியனை நெருங்கியுள்ளனர். சூரியன் குறித்த உண்மைகளும் இனி நமக்கு புலப்படும். வானத்தையும், நிலவையும் வசப்படுத்திய நாம், இனி சூரியனையும் சொந்தமாக்கிக் கொள்வோம்.  இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைகள் தொடர மீண்டும் வாழ்த்துகிறேன்.

click me!