நெல்லை - திருச்செந்தூர் இடையே நாளை முதல் ரயில் போக்குவரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

By Velmurugan s  |  First Published Jan 6, 2024, 4:41 PM IST

கனமழையால் ஏற்பட்ட சேதாரங்கள் சரி செய்யப்பட்ட நிலையில் நாளை முதல் திருநெல்வேலி, திருச்செந்தூர் இடையே வழக்கம் போல் ரயில்சேவை மேற்கொள்ளப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசிஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேில, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. வருடம் முழுவதும் பெய்ய வேண்டிய சராசரி மழையானது திடீரென ஒரே நாளில் பெய்ததால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன.

இதனிடையே மழையின் போது திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக சென்னைக்கு புறப்பட்ட விரைவு ரயில் கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு பின்னர் மீட்கப்பட்டனர். மேலும் திருநெல்வேலி, திருச்செந்தூர் இடையேயான ரயில் பாதை மிகவும் சேதமடைந்தது.

Latest Videos

undefined

வீட்டில் செல்வம் பெருக வேண்டும்; ரூபாய் நோட்டுகளால் அலங்கறிக்கப்பட்ட அம்மனை வழிபட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்

சில இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளம் அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் திருச்செந்தூர், திருநெல்வேலி இடையேயான ரயில் போக்குவரத்து சுமார் 20 நாட்களுக்கு தடை செய்யப்பட்டு தண்டவாளம் சீரமைப்பு பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்றைய தினம் சோதனை முறையில் பயணிகள் இன்றி ரயில் இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது.

 திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத் திருவிழா பத்தாயிரம் பேருக்கு கறி விருந்து பரிமாற்றம் 

தண்டவாளத்தின் உறுதித் தன்மை, சிக்னலின் செயல்பாடு, மின்பாதை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. ரயில் பாதை சீராக உள்ளதாக சான்று அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளை காலை முதல் திருநெல்வேலி, திருச்செந்தூர் இடையே வழக்கம் போல் அனைத்து ரயில்களும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!