நிவாரணப் பொருள் என்ற பெயரில், விலை உயர்ந்த அரிசி பையில், ரேசன் அரிசி விநியோகம் செய்யப்படுவதாகக் கூறி அமைச்சருக்கு எதிராக மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6 ஆயிரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய பயிர்களை பார்வையிட்ட வருவாயத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலித நல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரம் நின்று விவசாய நிலங்களின் பாதிப்புகளை பார்வையிட்டார். இதனை அடுத்து சங்கரன்கோவில் சமுதாய நலக்கூடத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நலத்திட்ட பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
பொங்கல் பரிசாக ரூ.2,500 மட்டுமாவது வழங்க வேண்டும் - கடம்பூர் ராஜூ கோரிக்கை
நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன் அரிசி பைகளையும், காய்கறிகள் அடங்கிய பைகளையும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார். இந்த நிலையில் சமுதாய நலக் கூடத்தில் இருந்து வெளியே வந்து அமைச்சர் வழங்கிய அரிசி பையை கர்ப்பிணி பெண் ஒருவர் பிரித்துப் பார்த்த போது பையில் இருந்த அரிசி ரேசன் அரிசி என்பதை அறிந்ததும் அதிர்ந்து போனார். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட நேரம் காத்திருந்து இந்த ரேசன் அரிசியைத் தான் வாங்க காத்து நின்றோமா என கேள்வி எழுப்பி கோபமடைந்தார்.
ரேசன் அரிசியை வாழங்குவதற்க்கு எதற்க்காக அமைச்சர், நாடாளு மன்ன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வர வேண்டும் என கோபத்துடன் கேட்ட அவர் தன்னை அழைத்துப் போக வந்த கணவனிடம் அமைச்சர் ரேஷன் அரிசி வழங்கியது குறித்து வேதனையுடன் தெரிவித்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்கப்படுமா? அமைச்சர் உதயநிதி பதில்
நிவாரணம் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை இப்படியெல்லாம் கொள்ளை அடிக்காதீர்கள் என அவர் அரசை கடிந்து கொண்டார். நிவாரண பொருட்கள் என்ற பெயரில் ரேசன் அரிசியை பையில் அடைத்து வைத்து அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய சம்பவம் சங்கரன்கோவில் பகுதி மக்கள் இடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.