தமிழ்நாட்டில் 16,000 கோடி முதலீடு செய்யும் வின்ஃபாஸ்டு நிறுவனம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

By SG BalanFirst Published Jan 6, 2024, 6:30 PM IST
Highlights

வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் மின்சார வாகன உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது. இதன் மூலம் சுமார் 3,000 - 3,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

வியட்நாமைச் சேர்ந்த முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.16,000 கோடி முதலீடு செய்வதை உறுதிசெய்துள்ளது. அந்நிறுவனத்தை வரவேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் மின்சார வாகன உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது. இதன் மூலம் சுமார் 3,000 - 3,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.  வின்ஃபாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் 2024-ல் தொடங்கும் என்றும் ஆண்டுக்கு 1,50,000 மின்சார வாகனங்கள் வரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Latest Videos

சிங்கப்பூரிலிருந்து மட்டும் ரூ.31,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழகத்துக்குக் கிடைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடிடாஸ், போயிங், வின்பாஸ்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன.

பிரான்சைச் சேர்ந்த வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் வாலியோ (Valeo) நிறுவனமும் தமிழகத்தில் ரூ.1000 முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. சென்னையில் தொடங்கப்படும் இந்த நிறுவனத்தின் ஆலை மூலம் 3 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புகள் பெறுவார்கள் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏக்கருக்கு 2 லட்சம்... லஞ்சம் வாங்கிக் குவிப்பதாக அமைச்சர் மூர்த்தி, உதவியாளர் மீது புகார்

இச்சூழலில், இது குறித்து கருத்து கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் வின்ஃபாஸ்டு நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்!" என்று கூறியுள்ளார்.

"இது வெறும் முதலீடு அல்ல; தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்!" என்றும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டார்கள் மாநாடு நாளை தொடங்க இருக்கிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில், மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இந்த மாநாட்டில் 30,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இஸ்ரோவின் ஆதித்யா எல்1 எத்தனை ஆண்டுகள் செயல்படும்? என்னென்ன ஆய்வுகள் செய்யும்?

click me!