மதுப்பிரியர்கள் ஷாக்.!! தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை? நீதிமன்றம் சொன்ன பரபரப்பு கருத்து !!

By Raghupati RFirst Published Sep 12, 2022, 6:18 PM IST
Highlights

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.

தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது. 

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பட வசூல் பட்டியலை போல 200 கோடியா, 250 கோடியா என்ற சாதனையை அறியும் அளவிற்கும் இருக்கும்.

மேலும் செய்திகளுக்கு..“60 சதவீதம் எஸ்கேப்.. ஸ்லீப்பர் செல்ஸ் முன்னாள் அமைச்சர்கள்” அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி - காரணம் இவரா ?

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதித்தும், மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்கவும், விலைப்பட்டியல் வைக்கவும், கூடுதல் விற்பனைக்கு மது விற்றால் புகார் அளிக்க உயர் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் விபரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்க வேண்டும். 

மேலும், மதுபான பாட்டில்களில் அதில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் விபரங்களை தமிழில் குறிப்பிடவும், டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும்‌‌" என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் மாணவர்கள் சீருடையுடன் மது அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் வழங்கப்பட்டன. அதனைப் பார்த்த நீதிபதிகள், ‘இது போன்ற வழக்கைத் தொடர்ந்த மனுதாரரை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.

மேலும் செய்திகளுக்கு..விடியா திமுக அரசே.! சாட்டையை சுழற்றிய எடப்பாடி பழனிசாமி - அதிமுகவினருக்கு கட்டளை போட்ட இபிஎஸ்.!

சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது ? என தெரியவில்லை. இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்’ என்று தெரிவித்தனர். மேலும் மனுதாரர் தொடர்ச்சியாக இந்த வழக்கு தொடர்பான விபரங்களைத் திரட்டவும், அரசுத்தரப்பில், இது தொடர்பாக விளக்கம் பெற்று தெரிவிக்கவும் உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு..“பாகுபலியை மிஞ்சிய பிரமாண்டம்”.. ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை மிஞ்சிய திமுக அமைச்சர் .! வெறுப்பில் மக்கள்

click me!