தமிழக மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு..! புதிய திட்டத்தை அறிவித்த அமைச்சர் பொன்முடி

By Ajmal KhanFirst Published Sep 12, 2022, 2:24 PM IST
Highlights

ஆஸ்திரேலியா மெல்பேர்ண் பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் இடையே உயர்கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலமாக தமிழக மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பல்கலைகழகத்தோடு ஒப்பந்தம்

தமிழக உயர்கல்வி துறை வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களோடு தொடர்பு கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.  நான் முதல்வன் திட்டத்திலும் , தமிழக கல்வி கொள்கையிலும் இதனை தெரிவித்து இருந்தார். இதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில் சென்னை பல்கலைக்கழகம் மெல்போன் பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு

இது குறித்து செய்திகளிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் தமிழக மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு மாணவர்களும் சென்னை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க முடியும் என்றும் தெரிவித்தார். இது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வரும் நாட்களில் பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களோடு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தில் தமிழக அரசின் பங்கு என்ன? மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன என்பது முடிவாகும் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

நீட் தேர்வு தமிழக மாணவர்கள் தோல்வி...! தலையும் வாலும் புரியாமல் வழிகாட்டும் ஆளுநர்- முரசொலி தலையங்கம்

 

click me!