பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.. எப்போது இருந்து தெரியுமா..?

By Thanalakshmi V  |  First Published Sep 12, 2022, 2:59 PM IST

நடப்பாண்டு 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
 


நடப்பாண்டு 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,” மே 2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட), மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 15.09.2022 அன்று முதல் வழங்கப்படும்.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:கால்நடை மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம் இதோ

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (Original Mark Certificates) / மதிப்பெண் பட்டியலினை (Statement of Mark) பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:IBPS PO முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது.. மெயின்ஸ் தேர்வு எப்போது..? முழு விவரம் இங்கே..

click me!