TASMAC : முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. குடிமகன்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
தமிழ்நாடு கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான்.
டாஸ்மாக் - உத்தரவு
டாஸ்மாக்கில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீண்டும் கடைபிடிக்குமாறு மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும், மதுவாங்க வருவோரை கூட்டமாக நிற்க அனுமதிக்க கூடாது, இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்துமாறு டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?
இதையும் படிங்க : AIADMK : ஒற்றை தலைமைக்கு 'ஓகே' சொன்ன சசிகலா.. அடுத்து எடப்பாடியா? பன்னீரா? உச்சகட்ட பரபரப்பு
டாஸ்மாக் ஊழியர்களும் முக கவசத்தை சரியான முறையில் அணிந்திருப்பதுடன் அவர்கள் தங்கள் கைகளை அடிக்கடி கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குடிமகன்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதையும் படிங்க : AIADMK : முடங்கிய இரட்டை இலை சின்னம்.. கதறும் ர.ரக்கள் - உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சோகம் !