தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்! மாணவர்களே இதை மட்டும் செஞ்சிடாதீங்க!

Published : Mar 02, 2025, 10:38 AM IST
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்! மாணவர்களே இதை மட்டும் செஞ்சிடாதீங்க!

சுருக்கம்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நாளை தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். 

பிளஸ் 2 பொதுத்தேர்வு (Tamilnadu Plus 2 Public Exam) 

TamilNadu Plus 2 exam: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. நாளை (மார்ச் 3) முதல் வரும் 25ம் தேதி வரை  பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் கீழ் நடைபெறும் பிளஸ் 2 தேர்வை 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர். 

முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளை கண்காணிப்பதற்காக 43,446 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்வுகளில் மாணவர்கள் முறைகேடு செய்வதை தடுப்பதற்காக 4,470 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் (Flying Squad) 

மேலும் மாவட்ட ஆட்சியர், முதன்மை, வட்டார கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, சரியான காற்ற்றோட்ட வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் காலங்களில் மிந்தடை இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. கிராமப்புறங்களில் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்காக போக்குவரத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விவசாயிகளின் வங்கி கணக்கில் 15ஆயிரம் ரூபாய்.! தமிழக அரசின் அசத்தலான திட்டம் அறிவிப்பு

தேர்வு அறைக்குள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைகளுக்குள் மாணவர்கள் செல்போன் போன்ற மின்சாதனங்களை கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். கலர் பென்சில், பேனாவால் எழுத கூடாது என அறிவிறுத்தப்பட்டுள்ளது. 

மாணவரின் புகைப்படம், பதிவெண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.விடைத்தாள்களில் தேர்வு எண், பெயர், சிறப்பு குறியீடுகள் ஆகியவற்றை குறிப்பிட கூடாது. 

பள்ளிக்கல்வி துறை (School Education Department) 

தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுவது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடப்பது, விடைத்தாள் மாற்றம் செய்வது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்தும் பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். தேர்வு குறித்த சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்க, பள்ளிக்கல்வி துறையின் ‘14417’ என்ற இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வு துறை கூறியுள்ளது.

லாரி லாரியாக வரும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவுதானா.? போட்டி போட்டு அள்ளும் மக்கள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தர்கா தவிர்த்து மற்ற இடமெல்லாம் இந்துக்களுடையது..! நீதிமன்றமே சொல்லிவிட்டது... அண்ணாமலை பேட்டி
ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ்பண்ணிடாதீங்க மக்களே!