திண்டுக்கல்லில் வெடி குண்டு வெடித்து இறந்த மர்ம நபர் யார்.? நடந்தது என்ன.? போலீஸார் விளக்கம்

Published : Mar 02, 2025, 07:43 AM IST
திண்டுக்கல்லில் வெடி குண்டு வெடித்து இறந்த மர்ம நபர் யார்.? நடந்தது என்ன.? போலீஸார் விளக்கம்

சுருக்கம்

திண்டுக்கல்லில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விசாரணையில், அவர் கேரளாவைச் சேர்ந்த ஜான்ஷாபு என்பதும், வெடிபொருட்களைக் கையாளும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

பயங்கரவாத செயலா.?

திண்டுக்கல்லில் மர் பொருள் வெடித்து மர்மான முறையில் ஒருவர் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ஏற்கனவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சென்னையில் NIA-வால் கைது செய்யப்பட்ட நிலையில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். 

இறந்த நபர் யார்.?

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அளித்துள்ள விளக்கத்தில், திண்டுக்கல் தாலுகா காவல் நிலையச் சரகம் சிறுமலையில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தொடர்பான கிடைத்த தகவலின் பேரில் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல்துணைக்காணிப்பாளர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் இறந்த நபர் கேரளா மாநிலம், கோட்டையத்தைச் சேர்ந்த ஜான்ஷாபு (வயது 60) என்பது தெரியவந்தது. இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூன்று பெண்குழந்தைகளும் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.

சென்னையில் அதிர்ச்சி! சினிமாவை மிஞ்சம் அளவில் பேட்மிண்டன் பயிற்சியாளர் சரமாரி வெட்டி படுகொலை!

கிணற்றில் பாறை உடைக்கும் வெடி பொருள்

இறந்த ஜான்ஷாபு என்பவர் கோட்டையத்தில் லாரி ஓட்டுநராகவும், அவ்வப்போது தோப்புக்களை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் இவருக்கு அதிக்குடிப்பழக்கம் இருந்த காரணத்தால் தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்து வெளி ஊர்களில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். விசாரணையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜான்ஷபு தனது குடும்பத்தினருடன் சண்டை போட்டுவிட்டு தமிழ்நாடு சென்று தோப்புக்களை குத்தகைக்கு எடுத்து நடத்தப்போவதாக கூறிவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அவ்வாறு வரும் போது தனது உறவினர் மூலமாக தான் குத்தகைக்கு எடுக்கும் தோப்புக்களில் கிணற்றின் பாறைகளை உடைக்க தேவைப்படும் வெடிமருந்தை கேரளாவில் உள்ள வெடிபொருள் விற்பனை கடையில் வங்கி கொண்டு வந்துள்ளார்.

வெடி பொருட்களை தவறாக இயக்கியதால் விபத்து

இவருடய குடும்பத்தார் முன்பே சிறுமலை பகுதியில் உள்ள தோப்புக்களை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த காரணத்தினால் தற்போதும் குத்தகைக்கு தோப்புக்களை எடுத்து நடத்துவதற்காக சிறுமலைப் பகுதிக்கு வந்துள்ளார். அவ்வாறு வந்த மேற்படி ஜான்ஷாபு சிறுமலை 15வது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் தான் கொண்டு வந்த வெடிபொருட்களை முன் அனுபவம் இல்லாமல் இயக்கி பார்த்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவயிடத்திலேயே இறந்திருக்கக்கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.

சென்னையில் கொடூரமாக கொலை செய்துவிட்டு இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட கும்பல்! அதிர்ச்சியில் போலீஸ்!

பிரேத பரிசோதனையில் தகவல்

மேற்படி தனிப்படையினர் கேரளா கோட்டையம் சென்று அவரது சொந்த ஊரில் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டும் அவரது அலைபேசி உள்ள தொடர்புகள் மற்றும் அலைபேசியில் இருந்த தாவுகள் பற்றி விசாரணை மேற்கொண்டதிலிருந்தும் எந்தவிதமான எதிர்மறையான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவர் இறந்த ஜான்ஷாபு எதிர்பாமல் ஏற்பட்ட வெடிவிபத்தால் உண்டான காயத்தால் தான் இறந்திருக்கக்கூடும் என முதற்கட்ட விசாரணையில் கூறியுள்ளார். பின்பு இறந்த ஜான்ஷாபுவின் பிரேதம் அவரது மனையிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்ய கேரளா அனுப்பப்பட்டது. மேற்படி வழக்கின் புலன் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் இறுதியறிக்கை விரைவில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 8 நாட்கள் விடுமுறை!