விடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை... 27 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

By vinoth kumarFirst Published Nov 12, 2022, 6:47 AM IST
Highlights

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்துள்ளது. 

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், நீலகிரி, தஞ்சாவூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்துள்ளது. 

இதையும் படிங்க;- மழையால் தாமதமான திருமணம்… கோயிலில் தேங்கிய நீரில் நனைந்த தம்பதிகள்… நீரை அகற்ற வேண்டுகோள்!!

இதன் காரணமாக  திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நேற்று கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், நள்ளிரவு முதல் பரவலாக  கனமழை கொட்டி தீர்த்து வருவதால் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருச்சி, மயிலாடுதுறை, தேனி, திருப்பத்தூர், சிவகங்கை, கோயம்புத்தூர், திருவாரூர், அரியலூர், நீலகிரி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுவை, காரைக்கால் பகுதிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- 3 தினங்களுக்கு மழை தொடரும்..! சென்னை, டெல்டா மாவட்டங்களில் மிக கன மழை - வானிலை மையம் எச்சரிக்கை

click me!