புயல் நிவரான நிதி கிடைக்கவில்லையா.? தமிழக அரசு சொன்ன முக்கிய தகவல்

Published : Feb 11, 2025, 01:03 PM IST
புயல் நிவரான நிதி கிடைக்கவில்லையா.? தமிழக அரசு சொன்ன முக்கிய தகவல்

சுருக்கம்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், இழப்பீடு கிடைக்காதவர்கள் அரசுக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் புயல் பாதிப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், மழை, வெள்ளத்தால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் சில ஆண்டுகளாகவே சென்னை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் அதீத கனமழையால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பாக நிவராண உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு டெல்டா மாவட்டத்தையே புரட்டிப்போட்டது கஜா புயல் இந்த புயலால் நாகை, வேதாரண்யம்,புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் வீடுகள், மரங்கள் காற்றின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டது.

டெல்டா மாவட்டத்தை புரட்டிய கஜா புயல்

மேலும் கஜா புயல்  தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைத்  தாக்கியது. இதில் 63 பேர் பலியாகினர். 732 கால்நடைகள் பலியாகின. 88,000 ஹெக்டேர் பரப்பு நெற் பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல்,  56,942 குடிசை வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன.  30,322 ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக இழப்பீடு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லையென கோரி இடிந்த வீடுகள், பாதிக்கப்பட்ட பயிர்கள், தென்னை மரங்கள், கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் வேண்டும் என கலைச்செல்வன், வெள்ளைச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

விண்ணப்பித்தால் பரிசீலனை

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளதாகவும், இழப்பீடு கிடைத்திருக்காவிட்டால் அரசுக்கு விண்ணப்பித்தால் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து அரசு தான் சட்டப்படி முடிவெடுக்க வேண்டும். அரசு நியாயமான இழப்பீடு குறித்து முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!