நடுக்கடல்… நள்ளிரவு… தமிழக மீனவர்களுக்கு நடந்த கொடுமை..!

Published : Sep 19, 2021, 06:46 AM IST
நடுக்கடல்… நள்ளிரவு… தமிழக மீனவர்களுக்கு நடந்த கொடுமை..!

சுருக்கம்

வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்களை கத்தியை காட்டி 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர்.

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்களை கத்தியை காட்டி 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர்.

நாட்கள் நகர,நகர தமிழக மீனவர்கள் பாடு  பெரும் திண்டாட்டமாக தான் இருக்கிறது. கடலில் ஒவ்வொரு முறை மீன்பிடிக்க செல்லும் போது அவர்கள் தாக்கப்படுவதும், பின்னர் துரத்தப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாகவே மாறிவிட்டது.

இந் நிலையில் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் இருந்து சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்களை கத்தியை காட்டி மிரட்டி ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வலைகளை அபகரித்து சென்றிருக்கின்றனர். மணியன் தீவு கடற்கரைக்கு அருகே நள்ளிரவில் மீன்பிடித்து கொண்டு இருந்த போது 8 மீனவர்களின் படகுகளை சூழ்ந்த கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டி இருக்கின்றனர்.

பின்னர், அவர்களை வைத்திருந்த ஜிபிஎஸ் வாக்கி டாக்கி கருவி, செல்போன் உள்ளிட்ட பொருட்களையும், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளையும் அள்ளிக் கொண்டு சென்றுவிட்டனர். பெரும் அச்சத்துடன் கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!