உலக நாடுகளுக்கு தெரிந்தவர் மோடிதான்.. எங்கே பிரதமர் போட்டோ..?? ஸ்டாலினை உலுக்கி எடுக்கும் ஆளுநர் தமிழிசை

By Ajmal Khan  |  First Published Jul 27, 2022, 1:02 PM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள இடங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் எந்த இடத்திலும் இடம்பெறவில்லையென புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.


நாளை தொடங்கும் செஸ் ஒலிம்பியாட்

சென்னையில் ஒலிம்பியாட் செஸ் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க 186 நாடுகளில் இருந்தும் வீரர்கள் சென்னை வந்துள்ளனர். இவர்களை தமிழக அரசு சார்பாக வரவேற்று நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளனர். இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நாளை சென்னை வருகிறார். சென்னையில் நேரு அரங்கத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் மோடி அன்றைய தினம் சென்னை ராஜ்பவனில் தங்குகிறார். இதனையடுத்து அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவுள்ளார்.

Tap to resize

Latest Videos

சென்னைக்கு நாளை வரும் பிரதமர் மோடி.. இரண்டு நாட்கள் பலூன்கள் பறக்க விட தடை..

மோடி படம் இல்லாத விளம்பரம்

இந்தநிலையில் சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரம் படுத்தும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செஸ் போட்டிகள், விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் கட் அவுட்கள் தமிழக அரசு சார்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் எந்த இடத்திலும் பிரதமர் மோடியின் படங்கள் இடம்பெறாதது பாஜகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இதனையடுத்து பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, ஒலிம்பியாட் செஸ் போட்டி போஸ்டர் ஒட்டப்பட்ட இடத்தில் பிரதமர் மோடியின் படத்தை தனியாக ஒட்டி வருகிறார். இந்த காட்சி சமூக வலை தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பு.. போராட்டத்தில் மயங்கிய எடப்பாடி பழனிசாமி.. மேடையில் நின்றுக்கொண்டிருந்த போது திடீர் மயக்கம்..

உலக நாடுகளின் அடையாளம் மோடி

இந்தநிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி பேனரில் பிரதமர் மோடி புகைப்படம் இடம்பெறவில்லையென புதுவை ஆளுநர் தமிழிசை வேதனை தெரிவித்துள்ளார். நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி புதுவை கடற்கரையில் தியாகச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது பெருமை மிக்க தருணம் என கூறினார்.

இருந்த போதும் ஒரு ஆதங்கம் இருப்பதாக தெரிவித்தார். உலக நாட்டு மக்களிடம் உங்களுக்கு யார் பிரதமராக வர வேண்டும் என கேட்டால் நரேந்திர மோடி தான் பிரதமராக வர வேண்டும் என கூறுவார்கள். இப்படி அடையாளமாக இருக்கும் பிரதமர் மோடி படத்தை செஸ் போட்டி நடைபெறும் எந்த இடத்திலும் வைக்கப்படவில்லையென கூறியுள்ளார். எனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை கவனிக்க வேண்டும் என தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார். எனவே மோடி படங்களை அனைத்து இடங்களிலும் இடம்பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

சண்டையை தடுக்க சென்ற மைத்துனர் கொலை...! விதவையான தங்கச்சி.. மனமுடைந்த இளைஞர் தற்கொலை
 

click me!