டெல்லி சென்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச முடியாத நிலையில், முன்னாள் துணை சபாநாயகரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் தொடரும் குழப்பம்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் அடுத்தடுத்து அதிமுகவிற்கு தோல்வியை ஏற்படுத்தி கொடுத்தது. தமிழக சட்ட மன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை இணைக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா, இபிஎஸ்,மற்றும் ஓபிஎஸ் உடன் ஆலோசனை மேற்கொண்டார். ஓபிஎஸ் இதற்க்கு ஒப்புக்கொண்டாலும் இபிஎஸ் இந்த முடிவிற்கு ஒத்துழைக்கவில்லை. இதன் காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தென் மாவட்டங்களில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தை இழந்த எடப்பாடி பழனிசாமி அணியினர். அதிமுகவை வலுப்படுத்துவதில் இரட்டை தலைமையால் பின்னடைவே ஏற்படுவதாக தெரிவித்தது. மேலும் ஒற்றை தலைமை தான் தேவை என பிரச்சனையை தொடங்கியது. இதன் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டு பிளவாக அதிமுக பிளவுப்பட்டுள்ளது.
தோல்வியில் முடிந்த டெல்லி பயணம்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட இபிஎஸ், டெல்லியில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டிருந்தார். இதற்காக நேரமும் கேட்கப்பட்டது. ஆனால் பாஜக தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத காரணத்தால் குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பியுள்ளார். இந்தநிலையில் டெல்லி மேலிடத்தில் இருந்து ஓபிஎஸ்க்கு தொலைபேசி மூலம் பேசிய முக்கிய பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்தநிலையில் மக்களவை முன்னாள் துணை சபாநாயகரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை, பிரதமர் மோடியை நேற்றைய தினம் சந்தித்து பேசியுள்ளார். சிறிது நேரம் மட்டுமே சந்தித்து பேசி வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் 7 ஆம் ஆண்டு நினைவு நாள்...! நினைவிடத்தில் உறவினர்கள் அஞ்சலி
மோடியை சந்தித்த தம்பிதுரை
இந்த சந்திப்பின் போதுகுடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வென்றதற்கு பிரதமர் மோடியை சந்தித்து தம்பிதுரை வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அதிமுக உட்கட்சி பிரச்சனை, முன்னாள் அமைச்சர்களுக்கு சிபிஐ நெருக்கடி தொடர்பாக பேசியதாக தகவல் வெளியானாலும், ஆனால் அதற்க்கு வாய்ப்பு இல்லையென்றே கூறப்படுகிறது. இந்த சந்திப்பு மரியாதை ரீதியான சந்திப்பாக மட்டுமே அமைந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே நாளை சென்னை வரும் பிரதமர் ஓபிஎஸ்- இபிஎஸ் என இருதரப்பையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தனித்தனியாக நடக்குமா? அல்லது ஓபிஎஸ்- இபிஎஸ் ஒன்றாக சென்று சந்திப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்
சென்னைக்கு நாளை வரும் பிரதமர் மோடி.. இரண்டு நாட்கள் பலூன்கள் பறக்க விட தடை..