செஸ் ஒலிம்பியாட் போட்டி. நாளை பிரம்மாண்டமான தொடக்க விழா.. தயார் நிலையில் செஸ் விளையாட்டு அரங்கம்

Published : Jul 27, 2022, 09:59 AM IST
செஸ் ஒலிம்பியாட் போட்டி. நாளை பிரம்மாண்டமான தொடக்க விழா.. தயார் நிலையில் செஸ் விளையாட்டு அரங்கம்

சுருக்கம்

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்கவிழாவை பிரதமர் நரேந்திரமோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் சுடர் மாமல்லப்புரம் வந்தடைந்தது. மேலும் செஸ் விளையாட்டு அரங்கம் தயார் நிலையில் உள்ளது.  

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்கவிழாவை பிரதமர் நரேந்திரமோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் சுடர் மாமல்லப்புரம் வந்தடைந்தது. மேலும் செஸ் விளையாட்டு அரங்கம் தயார் நிலையில் உள்ளது. 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை முதல் நடைபெற இருக்கிறது. இதன் தொடக்கவிழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த முறை கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.

மேலும் படிக்க:முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் 7 ஆம் ஆண்டு நினைவு நாள்...! நினைவிடத்தில் உறவினர்கள் அஞ்சலி

இந்நிலையில் இந்த ரஷ்யாவில் 44 வது செஸ் ஒலிம்பியாட் நடத்த திட்டமிட்ட நிலையில், போர் காரணமாக, சர்வதேச செஸ் கூட்டமைப்பு இந்தியாவை தேர்வு செய்தது. மேலும் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இந்த போட்டியை நடத்துவதற்கு சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஒப்புதல் வழங்கியது. மேலும்  போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க தமிழக அரசு சார்பில் ரூ.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கவுள்ள செஸ் ஒல்ம்பியாட் போட்டிக்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடந்து முடிந்துள்ளன.

மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளன. இதில் உலகம் முழுவதும் 187 நாடுகளிலிருந்து 2000க்கும் மேற்பட்ட செஸ் வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் 30 பேரும் உள்ளனர்.

மேலும் படிக்க:சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து பதிவிட்டால் கைது.. சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை.!

வீரர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் எந்தவித குறைபாடுகளுமின்றி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் முக்கியமான இடங்களில் போட்டி சின்னமான செஸ் தம்பி படம் வைக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் சுடர் இன்று போட்டி நடைபெறும் மாமல்லபுரம் வந்தடைந்தது.

கடந்த 23 ஆம் தேதி முதலே வீரர், வீராங்கனைகள் சென்னைக்கு வர தொடங்கினர். அவர்களுக்கு தமிழக அரசு அதிகாரிகள் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாளை போட்டி தொடங்கப்படவுள்ளதால் இன்றைய தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் வருகை புரிவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க:சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து பதிவிட்டால் கைது.. சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை.!

இதனிடையே சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை 6 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரம்மாணடமான தொடக்க விழா நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு, செஸ் போட்டியை தொடங்கி வைக்கிறார். மேலும்  29-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். 
 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி