அரசுப்பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநகர பேருந்துகளில் பயணசீட்டுக்காக மக்கள் வழங்கும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்த நிலையில் போக்குவரத்து கழகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

02:15 PM (IST) Nov 23
பெண் நிர்வாகியை மோசமான வார்த்தைகளால் பேசியவரை விட்டு விட்டு, பெண்களை தண்டிப்பது தான் உங்கள் அரசியலென்றால் அதைவிட மானம் கெட்ட பிழைப்பு உலகில் இல்லையென நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
01:01 PM (IST) Nov 23
திமுக மகளிரணி தலைவியாக விஜயா தாயன்பன், செயலாளராக ஹெல்ன் டேவிட்சன், இணைச் செயலாளராக குமரி விஜயகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
12:58 PM (IST) Nov 23
பொது விநியோகத் திட்டத்திற்கு உணவுப் பொருள் சப்ளை செய்யும் 3 தனியார் நிறுவனம் உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க..
12:25 PM (IST) Nov 23
டிடிவி தினகரன் பாஜகவோட கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அதற்கான சில நடைமுறைகளும் செயல் திட்டங்களும் இருக்கின்றன, எனவே அதற்கான காலமும் இருப்பதால் தற்போது அது குறித்து தெரிவிக்க முடியாது என அண்ணாமலை கூறியுள்ளார்.
12:13 PM (IST) Nov 23
நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது. இருப்பினும் சமந்தா தரப்பில் இருந்து இதுகுறித்த எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும் படிக்க
11:28 AM (IST) Nov 23
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் பிறந்தநாளான இன்று அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
11:07 AM (IST) Nov 23
கடலூர் மாவட்டத்தை அழித்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவது தான் அனைத்து வகை சிக்கல்களுக்கும் தீர்வு. அதன் மூலம் தான் கடலூர் மாவட்டத்தை சீரழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
11:07 AM (IST) Nov 23
பாஜகவில் பெண்களின் பாதுகாப்பும், ஜனநாயகமும் பல் இழித்து, சந்தி சிரிக்குது. பெண் உறுப்பை வெட்டி வீசுவேன், கொலை செய்வேன் என மிரட்டிய குற்றவாளிக்கு சூர்யாவுக்கு விசாரனை கமிட்டி. அதனை தட்டி கேட்ட பெண் காயத்திரி கட்சியை விட்டு நீக்கம் என திமுக தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.
10:36 AM (IST) Nov 23
அதியா ஷெட்டி - கே.எல்.ராகுல் ஜோடியின் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறதாம். மேலும் படிக்க
08:54 AM (IST) Nov 23
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கும்மிடிப்பூண்டி அதனை சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
08:47 AM (IST) Nov 23
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பத்தாண்டிற்கும் மேலாகப் பணிபுரியும் கணினி உதவியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கு வன்மையான கண்டிக்கதக்கது என சீமான் தெரிவித்துள்ளார்.
08:20 AM (IST) Nov 23
தங்கலான் படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளியன்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்நிலையில், தங்கலான் படத்துக்காக நடிகர் சீயான் விக்ரம், வித்தியாசமான கெட் அப்பில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் படிக்க
07:56 AM (IST) Nov 23
கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாணவர்கள் பாதுகாப்பு கருதி இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
07:50 AM (IST) Nov 23
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.
07:49 AM (IST) Nov 23
பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கூறியுள்ளார்.
07:49 AM (IST) Nov 23
சென்னை டிபிஐ வளாகத்தில் ததிமுக மூத்த தலைவர் அன்பழகனுக்கு சிலை அமைக்கும் முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.