தமிழ்நாடு பாஜக கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியில் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

01:37 PM (IST) Nov 22
பெண்கள் பெயருக்கு பின்னால் பட்டம் இருப்பது கவுரவம் அல்ல, அடிப்படை உரிமை என ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
01:15 PM (IST) Nov 22
வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் 22-23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12:05 PM (IST) Nov 22
சென்னையில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
12:04 PM (IST) Nov 22
கூட்டணிக் கட்சியை பற்றியும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை பற்றியும் யூடியூப் சேனல்களில் கட்சியில் சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள் கட்சியின் நிலைப்பாடாக மாறுவது ஏற்புடையது அல்ல என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க..
11:12 AM (IST) Nov 22
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநரை சந்திக்க மீண்டும் நேரம் கேட்டுள்ளோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
10:39 AM (IST) Nov 22
உடல்நலக்குறைவால் காலமாண தமிழறிஞர் ஔவை நடராசனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
10:20 AM (IST) Nov 22
கர்ணன் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த சமயத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார். இப்படத்தை பா.இரஞ்சித் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. மேலும் படிக்க
08:59 AM (IST) Nov 22
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பும் முடிவு மிகவும் தவறானது என தெரிவித்துள்ள சீமான் கொலைக்களத்திற்கே அனுப்புவதற்கு சமமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
08:38 AM (IST) Nov 22
தேனிசைத் தென்றல் தேவாவின் இசைக்கச்சேரியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவலை வெளியிட்டார். மேலும் படிக்க
08:33 AM (IST) Nov 22
சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
08:28 AM (IST) Nov 22
குன்னூர் அருகே தனியார் மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் 8 நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
08:09 AM (IST) Nov 22
திமுக-காங்கிரஸ் கூட்டணி வரும் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
07:47 AM (IST) Nov 22
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைதிகள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
07:47 AM (IST) Nov 22
நில எடுப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு, இழப்பீடு வழங்க என்.எல்.சி. நிறுவனம் முன்வந்துள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
07:46 AM (IST) Nov 22
தனிக்கட்சி நடத்தும் டிடிவி. தினகரனுக்கு அதிமுகவைப் பற்றி பேச தகுதி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் காட்டமாக கூறியுள்ளார்.