Published : May 25, 2023, 07:08 AM ISTUpdated : May 26, 2023, 01:14 PM IST

Asianet Tamil News Highlights : புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்கும் 25 கட்சிகள்

சுருக்கம்

Asianet Tamil News Highlights : எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் தவிர, தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, தமாக உள்பட 25 கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்பேற்க உள்ளன.

Asianet Tamil News Highlights : புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்கும் 25 கட்சிகள்

08:14 PM (IST) May 25

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் 25 கட்சிகள்

எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் தவிர 25 கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்பேற்க உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, தமாக ஆகிய கட்சிகளும் இவற்றில் உள்ளன. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள 18 கட்சிகளும், கூட்டணியில் இல்லாத 7 எதிர்க்கட்சிகளும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கும் 25 கட்சிகள்

10:16 AM (IST) May 25

டெலிகிராம் செயலியில் நடந்து வரும் நூதன மோசடி.. யாரும் ஏமாற வேண்டாம்.. தமிழக டிஜிபி வார்னிங்

டெலிகிராம் செயலியில் நடைபெற்றும் வரும் நூதன மோசடி குறித்து டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

09:30 AM (IST) May 25

2024 ஜனவரியில் பிரம்மாண்டமாக திறக்கப்பட உள்ள ராமர் கோயில்.. பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த உ.பி. முதல்வர்

உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தி, ராமர் கோயிலின் பிரமாண்ட திறப்பு விழாவிற்கு ஆவலுடன் தயாராகி வரும் நிலையில், உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

09:03 AM (IST) May 25

பள்ளி வேன் - கார் நேருக்கு நேர் மோதல்.. கோவிலுக்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.!

சங்கரன்கோவில் அருகே பள்ளி வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் படிக்க

09:02 AM (IST) May 25

தந்தை பெயரை சொல்லி உடன்பிறந்த அண்ணனையே விரட்டி அடித்தவர் ஸ்டாலின்.. தங்கம் தென்னரசை விளாசிய ஜெயக்குமார்.!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் அமெரிக்கா சென்றார் என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லாவிடில், ஸ்டாலினும், தங்கம் தென்னரசுவும் தங்களது பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என ஜெயக்குமார் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

09:02 AM (IST) May 25

தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியனின் மொழி.. நாடு திரும்பிய பிரதமர் மோடி அதிரடி சரவெடி பேச்சு..!

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறை  சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு  பிரதமர் மோடி நாடு திரும்பினார். 

மேலும் படிக்க

07:09 AM (IST) May 25

பிரதமர் மோடி நாடு திரும்பினார்

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை  சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு  பிரதமர் மோடி நாடு திரும்பினார். 

07:09 AM (IST) May 25

சென்னையில் 369வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 369வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 


More Trending News