செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். கிழக்கு கடற்கரை சாலை அருகே ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

07:13 PM (IST) May 04
ஜன் கி பாத்துடன் இணைந்து ஏசியாநெட் நியூஸ் இரண்டாவது முறையாக தேர்தலுக்கு முந்தைய இறுதிக் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. 30,000 பேரிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...!
04:11 PM (IST) May 04
மாமல்லபுரம் அருகே அரசு அரசு பேருந்து மீது ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
04:10 PM (IST) May 04
கேரளாவில் ஏழைப்பெண்ணுக்கு இந்து முறைப்படி மசூதியில் வைத்து திருமணம் நடத்தப்பட்டது குறித்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
02:09 PM (IST) May 04
தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை செய்ய தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
01:40 PM (IST) May 04
தொழில்துறை ஆராய்ச்சியில் புதிய சகாப்தமாக, இந்தியா - இஸ்ரேல் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
01:38 PM (IST) May 04
50 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இப்போது ஆக்டிவ் இணைய பயனர்களாக உள்ளனர் என்று புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
01:15 PM (IST) May 04
நடிகர் மனோபாலாவின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும் படிக்க
12:45 PM (IST) May 04
நடிகர் மனோபாலாவின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் நேரலை காட்சிகள் இதோ
11:59 AM (IST) May 04
40 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த மனோ பாலா மரணமடைந்ததை தொடர்ந்து அவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இவரை பற்றி பலருக்கும் தெரிந்திடாத சில தகவல்கள் இதோ... மேலும் படிக்க
11:58 AM (IST) May 04
மறைந்த நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான மனோபாலாவின் கடைசி வீடியோ மற்றும் அவர் ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படமும் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
11:57 AM (IST) May 04
நடிகரும், இயக்குனருமான மனோபாலா இன்று மரணமடைந்த நிலையில், அவருக்கு சினிமாவில் நிறைவேறாமல் போன ஆசை பற்றி தற்போது பார்க்கலாம்.மேலும் படிக்க
11:57 AM (IST) May 04
நடிகர் மனோபாலா தான் இயக்குனராக உச்சத்தில் இருக்கும்போது ஒரு நாளைக்கு 200 சிகரெட்டுகள் குடிப்பேன் என்று பழைய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். மேலும் படிக்க
11:38 AM (IST) May 04
நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், தற்போது அவரது இறுதிச் சடங்குகள் முடிந்து அவரது உடல் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இதில் வழிநெடுக மக்கள் அவரது உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றன
11:25 AM (IST) May 04
2019ம் ஆண்டு தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி சந்தானகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
11:21 AM (IST) May 04
செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டதோடு, அவரை நடிகர் ஷாருக்கான் முறைத்தபடி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
09:52 AM (IST) May 04
நடிகை திரிஷாவின் 40-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரின் குழந்தைப்பருவ புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
09:37 AM (IST) May 04
இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது. http://Neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
09:36 AM (IST) May 04
வாடிவாசலில் இருந்து காளை அவிழ்த்து விட்டபோது சீறிப்பாய்ந்து வந்த போது எதிர்பாராத விதமாக தடுப்புக் கட்டையில் மோதியதுமே சுருண்டு விழுந்ததை கண்டு விஜயபாஸ்கர் பதறிப்போனார்.
08:39 AM (IST) May 04
கன்னியாகுமரி மாவட்டம் சுண்டன்பரப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(36). இவர் சுவாமிநாதபுரம் பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து நைசாக பேச்சு கொடுத்தார்.
08:20 AM (IST) May 04
திருவள்ளூர், செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் உள்ள தனியார் ஆம்னி பேருந்து அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
08:08 AM (IST) May 04
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், மயிலாப்பூர், போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
07:00 AM (IST) May 04
மீண்டும் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று தமிழகத்தை மிகச் சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே நமது லட்சியம் என ஜெயபிரதீப் கூறியுள்ளார்.