கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை பிப்ரவரி 1ம் தேதி வேலூர் மண்டலத்தில் தொடங்கி வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக பிப்ரவரி 1, 2ல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

12:08 AM (IST) Jan 29
திமுக ஒன்றிய செயலாளர் பெண் புரோக்கரிடம் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
11:17 PM (IST) Jan 28
டாஸ்மாக் கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் தூசி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10:50 PM (IST) Jan 28
லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், நான்கு பேர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது.
10:17 PM (IST) Jan 28
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால் தமிழ்நாடு அரசியல் களத்தில் அனலை ஏற்படுத்தியுள்ளது.
08:32 PM (IST) Jan 28
டெல்லியில் 17 வயது சிறுவன் ஒருவன், பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை பெற்று அவர்களை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
07:39 PM (IST) Jan 28
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொஹல் கார்டன் பெயரை அம்ரித் உதயான் என்று மாற்றி உள்ளது மத்திய அரசு.
06:47 PM (IST) Jan 28
பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 (BMW X1) புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
05:44 PM (IST) Jan 28
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
05:12 PM (IST) Jan 28
தினமும் தெருக்களில் துணிகளை விற்று 500 ரூபாய் சம்பாதிக்கும் சிறு வியாபாரியின் வீட்டுக் கதவை தட்டி ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி 366 கோடி ரூபாயை அதிகாரிகள் கேட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
02:04 PM (IST) Jan 28
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்தே களம் காண உள்ளோம் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜக கருத்து தெரிவிக்காத நிலையில், அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
02:04 PM (IST) Jan 28
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக, ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜக தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தால் உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவிப்பார். தேர்தல் வேலையை எப்போது தொடங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும், அவர் நிச்சயம் வெற்றிக்கனியை அடைவார் என ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ளார்.
02:03 PM (IST) Jan 28
குடியரசு நாள் என்ற புனித நாளில், பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் கடைபிடித்துள்ள அளவீடு அதிர்ச்சியளிக்கிறது. எதிர்ப்பு எழாமல் இருந்திருந்தால் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் கலாச்சாரம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நீட்டிக்கப்பட்டிருக்கக்கூடும்.
10:03 AM (IST) Jan 28
குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்த உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
10:02 AM (IST) Jan 28
வரும் 30ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
08:26 AM (IST) Jan 28
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். திமுக மாதிரி சர்வாதிகார கட்சி கிடையாது. இது ஜமீன்தார் கட்சியோ, அரச கட்சியோ கிடையாது. வேட்பாளரை அறிவிக்க 31ம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. ஈரோடு இடைத்தேர்தலை பொறுத்தவரை வெற்றி எங்களுக்கு தான்.
07:44 AM (IST) Jan 28
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
07:44 AM (IST) Jan 28
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுபோவதாக அறிவித்து ஆனந்த் என்பவர் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.