இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமது கையெழுத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்தார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரியும் பழனிசாமி மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி தங்களை யாரும் அணுகவில்லை என்றும் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

01:53 PM (IST) Feb 02
துபாய்க்கு சீக்ரெட் டிரிப் சென்றுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, அங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க
01:06 PM (IST) Feb 02
இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட ஐபிஎஸ் தனது பலத்தையும் வளர்ச்சியையும் காட்ட கூட்டணி கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் அவரால் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெரிய வீழ்ச்சி என பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுமார் விமர்சித்துள்ளார்.
11:59 AM (IST) Feb 02
வருமானவரி விகிதங்களில் 2017-18ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு தற்போதுள்ள ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலாவது இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
10:44 AM (IST) Feb 02
கள்ளக்காதல் விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கூலிப்படையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏட்டு உட்பட 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
10:43 AM (IST) Feb 02
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தங்கள் அணி சார்பாக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், ஜெ.தீபா ஓபிஎஸ்ஸை சந்தித்ததால் அவர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
10:21 AM (IST) Feb 02
தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுத்ததும் சிம்பு தன் சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது. மேலும் படிக்க
10:05 AM (IST) Feb 02
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளபடி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
09:22 AM (IST) Feb 02
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தில் விஜய்யுடன் நடிக்க பிரபல நடிகரின் மகள் ஒருவரும் கமிட் ஆகியுள்ள தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் படிக்க
08:24 AM (IST) Feb 02
வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் நடிகர் தனுஷ் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த திருமணத்தில் கிளாமர் உடையில் வந்து கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும் படிக்க
08:06 AM (IST) Feb 02
பயண நேரத்தை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இனி மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். சமீபத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் சென்னை கூடூர், சென்னை ரேணிகுண்டா ஆகிய 2 வழித்தடங்களில் 130 கிலோ மீட்டர் வேகம் அவரை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
07:37 AM (IST) Feb 02
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அண்ணாநகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க
07:37 AM (IST) Feb 02
மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பு, வேளாண் துறைக்கு சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் பொருளாதார தேக்க நிலை மற்றும் வேலையிழப்புகள் இந்தியாவை பாதிக்காதபடி எதிர்கொள்வதற்கான செயல்திட்டங்கள் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.