திமுக தொடர்ந்து வெற்றிபெற்று வருவதை தாங்க முடியாமல் பழனிசாமி பொய் குற்றச்சாட்டு கூறி வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அளித்த பிரமாண்ட வரவேற்பை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. திமுகவுக்கும் முதலமைச்சருக்கும் மக்கள் அளித்து வரும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என்று தெரிவித்தார்.

06:25 PM (IST) Aug 25
Cobra Trailer : இன்று படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சியான் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதை அடுத்து இணையதளத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
Cobra Official Trailer : உருமாறும் சீயான் ..வெளியானது விக்ரமின் கோப்ரா ட்ரைலர்..
05:40 PM (IST) Aug 25
அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க
05:27 PM (IST) Aug 25
இயக்குனர் கௌதம் வாசுதேவன் மேனனிடம் உதவியாளராக இருந்தவர் மணி நாகராஜ். இவர் பென்சில் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
director mani nagaraj passes away : ஜிவி பிரகாஷ் பட இயக்குநர் திடீர் மரணம்... சோகத்தில் திரையுலகம்!
04:52 PM (IST) Aug 25
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைய உள்ள கடைகள் அமைச்சர் தா,மோ அன்பரசன் கைகாட்டும் நபர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலுள்ள ஒவ்வொரு கடைகளுக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்து கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படியாவது கடையை பெற வேண்டுமென கட்சிக்குள்ளாக முயற்சித்து வந்தவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளது தெரிகிறது. மேலும் படிக்க
04:51 PM (IST) Aug 25
ஆகமத்தின் பெயரால் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடை ஏற்பட வாய்ப்புள்ளது எனவே தமிழக அரசு தனிச்சட்டமியற்றி ஆரியச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:மேலும் படிக்க
04:50 PM (IST) Aug 25
விஜயகாந்தின் 70வது பிறந்த நாளான இன்று "அண்ணா உங்கள் அன்புக்கு நான் அடிமை" என நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்த பழைய கடிதமொன்று வைரலாகி வருகிறது. நடிகரும்,தேமுதிக தலைவருமான விஜயகாந்த்துக்கு பலரும் வாழ்த்துக் கூறி வரும் நிலையில், விஜய் தெரிவித்த பழைய வாழ்த்து மடல் சமூக வலைதளத்தில் வேகமாப பரவி வருகிறது. மேலும் படிக்க
04:49 PM (IST) Aug 25
கேப்டன் விஜயகாந்தை அரசியல் தலைவராக மட்டுமின்ற மனித நேயம் மிக்க நபராக மக்கள் பார்க்கிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். அரசியல் சினிமாவை கடந்து மனிதநேயமிக்க தலைவர் கேப்டன் விஜயகாந்த் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.மேலும் படிக்க
03:40 PM (IST) Aug 25
அதிமுக தலைமை அலுவலம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க..
02:55 PM (IST) Aug 25
இன்றைய தலைமுறை நடிகர்கள் பலரும் சின்ன சின்ன சண்டைகாட்சிகளை செய்வதற்கே பயப்படுவதாக கூறப்படும் நிலையில் விஜயகாந்த் மணிக்கூண்டில் டூப் இல்லாமல் ஸ்டண்ட் செய்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளம் நடிகர்கள் செய்ய யோசிக்கும் ரிஸ்குகளை அசால்ட்டாக எடுத்த விஜயகாந்த்..
02:51 PM (IST) Aug 25
ஆனால் படத்தை பார்த்த பலரும் நம்ம ஊரு ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் அப்டேட் வர்க்ஷனாக இந்த படம் உள்ளது என விமர்சனம் செய்து வருகின்றனர்.
என்னது ஜெயம் ரவி படம் மாதிரி இருக்கா? விஜய் தேவரகொண்டாவின் லைகர் பட விமர்சனம் இதோ !
02:14 PM (IST) Aug 25
ஆளும் கட்சியாக திமுக இருந்து வருவதால் வேடந்தாங்கல் பறவை போல் ஆறுகுட்டி தாவி உள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, சாதாரண தொண்டர்கள் என்னை சந்திக்கலாம். இனி முதல்வரின் ஸ்டாலின் வீட்டு வாசலைக்கூட ஆறுகுட்டியால் நெருங்க முடியாது கூறினார்.
01:22 PM (IST) Aug 25
விஜயகாந்த் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற டாப் 10 IMDB ராக்கிங் பட்டியலில் இடம்பிடித்த படங்கள் பற்றி இதில் பார்க்கலாம்.
01:22 PM (IST) Aug 25
நடிகர் விஜயகாந்த் தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்து, ஒரே ஒரு இயக்குனர் இயக்கத்தில் மட்டும் 17 படங்கள் நடித்துள்ளார். அந்த இயக்குனர் மற்றும் படங்கள் குறித்த விவரங்கள் இதோ..
12:30 PM (IST) Aug 25
அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் விவரம் பின்வருமாறு:மேலும் படிக்க
12:29 PM (IST) Aug 25
மதுரை மாநகராட்சி ஆணையாளர் பெயரில் வாட்ஸ் மூலம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
12:21 PM (IST) Aug 25
மாணவி ஸ்ரீமதியின் முதல் மற்றும் 2வது பிரேத பரிசோதனை முடிவுகள் நிறைய வேறுபாடு உள்ளதாக வழக்கறிஞர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
12:20 PM (IST) Aug 25
தனது பிறந்தநாளையொட்டி, தொண்டர்களை சந்திக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி தலைமை அலுவலகம் வந்தார்.
12:00 PM (IST) Aug 25
ஒன்றரை கோடி தொண்டர்களுக்காக அல்லாமல், ஓபிஎஸ் நலனுக்காக தனிநீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தனி நீதிபதியின் தீர்ப்பு யூகத்தின் அடிப்படையிலானது. 2,539 பொதுக்குழு உறுப்பினர்களும் தனக்கு ஆதரவு தெரிவித்து தனித்தனியாக தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் அளித்துள்ளனர். பொதுக்குழு முடிவே இறுதியானது: இதை ஏற்றுக் கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும் என இபிஎஸ் தரப்பு வாதம்.
11:27 AM (IST) Aug 25
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்த பழனிசாமி மேல்முறையீட்டு மனு மீது இறுதி விசாரணை தொடங்கியது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு விசாரித்து வருகிறது.
11:25 AM (IST) Aug 25
அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11:12 AM (IST) Aug 25
ஒசூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
09:43 AM (IST) Aug 25
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை சந்திக்கவுள்ளார்.
09:42 AM (IST) Aug 25
அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடர வேண்டும் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இபிஎஸ் தொடங்கிய மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
மேலும் படிக்க..
09:42 AM (IST) Aug 25
ஊதிய ஒப்பந்த காலம் 4 ஆண்டுகளாக அதிகரித்ததை கண்டித்து சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் அனைத்து போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
09:41 AM (IST) Aug 25
என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உடல் நலம் பெற்று - துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
08:43 AM (IST) Aug 25
கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டம் சிரா அருகே லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
08:21 AM (IST) Aug 25
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செப்டம்பர் 1ம் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
08:16 AM (IST) Aug 25
பரோட்டா சாப்பிக்கொண்டிருந்த போது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
08:14 AM (IST) Aug 25
திருப்பூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மண்டல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார்.
07:29 AM (IST) Aug 25
திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை பணியா? எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
07:28 AM (IST) Aug 25
Horoscope Today- Indriya Rasipalan August 25 2022: இன்றைய ( 25/ 08/ 2022) 12 ராசிகளில் யாருக்கு செல்வம் பெருகும். யாருக்கு தொல்லை வந்து சேரும் என்பதை பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, தெரிந்து வைத்து கொள்வோம்.
07:27 AM (IST) Aug 25
கடந்த 6 மாதங்களில் காவிரி டெல்டாவில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. டெல்டா அபாயத்தை நோக்கி நகர்வதையே இது காட்டுகிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.