கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் மாற்றம். சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

08:35 PM (IST) Apr 29
பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' 100வது எபிசோட் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.
08:34 PM (IST) Apr 29
கல்லூரி மாணவிகளுக்கு அரசு வழங்கும் ரூ.1000 உதவித்தொகையை அவர்கள் எப்படி செலவிட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசி இருப்பது புதிய சர்ச்சையாகக் கிளம்பியுள்ளது.
03:35 PM (IST) Apr 29
கேரள அரசு தன் தோல்வியை, மத்திய அரசின் மீது சுமத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது என்று குற்றஞ்சாட்டி உள்ளார் பாஜக எம்.பி பிரகாஷ் ஜவடேகர்.
03:01 PM (IST) Apr 29
காவிரி ஆற்றில் கர்நாடகம் மிகப்பெரிய அளவில் கழிவுகளை கலக்கச் செய்கிறது. அதனை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
02:38 PM (IST) Apr 29
முன்னாள் முதல்வர் சித்தராமையா காரில் ஏறும் போது சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
02:38 PM (IST) Apr 29
முன்னாள் முதல்வர் சித்தராமையா காரில் ஏறும் போது சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
02:18 PM (IST) Apr 29
திமுகவினரின் சொத்துப்பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் தற்போது எம்.பி.கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
01:22 PM (IST) Apr 29
சுத்தம், சுகாதாரம், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்பான சமூகம் சார்ந்த நடவடிக்கைகளை மன் கி பாத் ஊக்குவித்தது என்று பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார் பில் கேட்ஸ்.
12:42 PM (IST) Apr 29
காங்கிரஸ் முறைகேடுகளால் நேரத்தை வீணடிக்கிறது. காங்கிரஸ் என்னை 91 முறை அவமதித்தது. பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் வீர் சாவர்க்கரையும் காங்கிரஸ் அவமதித்துள்ளது என்று கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
12:08 PM (IST) Apr 29
கடந்த ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சூடானில் இந்திய விமானப் படை (IAF) துணிச்சலான நடவடிக்கையில் இறங்கியது.
11:52 AM (IST) Apr 29
மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11:13 AM (IST) Apr 29
சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
10:36 AM (IST) Apr 29
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காணலாம்.
09:38 AM (IST) Apr 29
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் மைனர் சிறுமி, இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
09:32 AM (IST) Apr 29
நடிகர் அஜித் உடன் இணைந்து பல வெற்றி படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி (58) புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று காலமானார்.
09:28 AM (IST) Apr 29
இளம்பெண் கிருத்திகா கடத்தப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை நவீன் பட்டேல் கைது செய்யப்பட்டுள்ளார்.\
08:50 AM (IST) Apr 29
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் 2ம் பாகம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாள் வசூல் நிலவரத்தை காணலாம்.
08:23 AM (IST) Apr 29
கர்நாடகத்தில் பாஜக நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
08:22 AM (IST) Apr 29
சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க நிபந்தனைகளுடன் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி வழங்கியுள்ளது.
08:06 AM (IST) Apr 29
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்கள் தொடர்பாக டெல்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
07:12 AM (IST) Apr 29
2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பிரமாண பத்திரத்தில் சொத்து விவகாரங்களை குறைத்து காட்டியதாக எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சேலம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.