பஞ்சாப் ராணுவ முகாமில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு பேரில் ஒருவர் தேனி மாவட்டத்தைச் தேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம், பதிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. அதை தொடர்ந்து அங்கு 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்து கிடந்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 4 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவர் தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பது தெரியவந்துள்ளது.

10:55 PM (IST) Apr 12
தமிழ் புத்தாண்டு அன்று நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் ?, என்னவெல்லாம் செய்ய கூடாது என்பதை பற்றி பார்க்கலாம்.
10:17 PM (IST) Apr 12
ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மீது அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.
09:05 PM (IST) Apr 12
இந்தோனேசிய ஆண் ஒருவருக்கு உடலுறவின் போது ஏற்பட்ட ஆபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
08:38 PM (IST) Apr 12
சி.ஆர்.பி.எஃப் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தது.
06:44 PM (IST) Apr 12
10.5% உள் ஒதுக்கீட்டிற்கான ஆணைய காலக்கெடு நீட்டிப்பு சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
06:05 PM (IST) Apr 12
கர்நாடகா தேர்தலில் தற்போது அமுலுக்குப் பிறகு குஜராத் மிளகாய் சூடு பிடிக்கிறது. விரைவில் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழல் அரசியல் கலாம் பரபரப்பாக உள்ளது.
04:55 PM (IST) Apr 12
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
04:21 PM (IST) Apr 12
பாஜகவைச் சேர்ந்த முக்கிய தலைவரான சம்பித் பத்ரா எரியும் நெருப்பில் நடந்து ஒடிசாவின் தெய்வத்தை வணங்கினார்.
03:09 PM (IST) Apr 12
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பார்வை மங்குவதாகவும், நாக்கு மரத்துப்போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
10:09 AM (IST) Apr 12
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7830 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருதுவமனை மற்றும் வீடுகளில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
09:22 AM (IST) Apr 12
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் முடிவுக்கு எதிராக ஆன்லைன் கேம் நிறுவனர்கள் நீதிமன்றத்தில் முறையிடவுள்ளனர். இதன் காரணமாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
08:44 AM (IST) Apr 12
தமிழக சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் மானிய கோரிக்கை தாக்கல் செய்த நிலையில், அவரது மனைவி கிருத்திகா உதயநிதி, மைத்துனர் சபரீசன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சட்டப்பேரவை மாடத்தில் இருந்து உதயநிதியின் பேச்சை பார்த்து ரசித்தனர்.
08:28 AM (IST) Apr 12
உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் முன் திடீரென மசோதாக்களுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
08:26 AM (IST) Apr 12
சசிகுமார் நடிப்பில் வெளியான 'அயோத்தி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சசிகுமார் மற்றும் படக்குழுவினருக்கு.. சமூக வலைதளம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
08:26 AM (IST) Apr 12
மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைத்தால் விவசாயிகளை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் பணம் வழங்கப்படும் என முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி அறிவித்துள்ளார்.
08:25 AM (IST) Apr 12
நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று அதிகாலை 5.35 மணி அளவில் பீகார் மாநிலம் அராரியாவில் 4.3 ரிக்டர் அளவு நில நடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ., எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
08:24 AM (IST) Apr 12
கர்நாடகா தேர்தலில் போட்டியிட பாஜகவில் மூத்த பாஜக தலைவர்களுக்கு இடம் மறுக்கப்படுவதால், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
08:24 AM (IST) Apr 12
ஐபிஎல் போட்டிகளை காண அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் பாஸ் வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
08:23 AM (IST) Apr 12
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 189 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டு உள்ளது.
07:44 AM (IST) Apr 12
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதை தொடர்ந்து டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் தங்கள் இணைத்து கொண்டனர்.
மேலும் படிக்க..
07:44 AM (IST) Apr 12
அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் விசாரணை கைதிகளின் பல்லை பிடிங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யாததற்கு கண்டனம் தெரிவித்துள்ள கே.பாலகிருஷ்ணன், உடனடியாக வழக்கு பதிவுசெய்திட கோரிக்கை விடுத்துள்ளார்.