நாட்டின் 40% காப்பர் தேவையை ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய்த நிலையில் வெளிநாட்டு நிதியுதவியுடன் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் தூண்டுவிடப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டி உள்ளார்.

03:22 PM (IST) Apr 06
கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டதன் பின்னணி அரசியல் இருப்பதாக நடிகை அபிராமி வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
12:36 PM (IST) Apr 06
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சுவாசக்கோளாறு மற்றும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பினார்.
11:55 AM (IST) Apr 06
குல தெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று கும்பகோணம் சென்றிருந்த நயன்தாரா அங்கு போட்டோ எடுத்தவர்களிடம் கடிந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
10:57 AM (IST) Apr 06
பாஜக நிறுவன நாளில் நாட்டில் வேரூன்றி இருக்கும் ஊழல், குடும்ப அரசியல், சட்டம் ஒழுங்கை சீர் செய்ய உறுதி எடுத்துக் கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பேசினார். மேலும் படிக்க
10:17 AM (IST) Apr 06
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது பொதுமக்கள் மற்றும் இல்லத்தரிகளின் மத்தியில் கொஞ்சம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
10:17 AM (IST) Apr 06
11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை இன்று 9.76,089 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
10:16 AM (IST) Apr 06
தமிழகத்தில் கொரோனா பாததிப்பால் அடுத்தடுத்து உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
09:36 AM (IST) Apr 06
டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் கலந்துகொண்டனர். குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தான் பத்ம விருதுகளை வழங்கினார். அந்த வகையில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் படிக்க
09:16 AM (IST) Apr 06
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து வரும் சூர்யா 42 படத்திற்கு அக்னீஸ்வரன் என டைட்டில் வைத்துள்ளதாக தகவல் லீக் ஆகி உள்ளது. மேலும் படிக்க
08:34 AM (IST) Apr 06
ஒடேலா ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தசரா திரைப்படம் ரூ.100 கோடி வசூலை அள்ளிக்குவித்துள்ளது. மேலும் படிக்க
08:01 AM (IST) Apr 06
லைகா நிறுவனத்திடம் இருந்து பெற்ற தொகையை செலுத்த தவறினால் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் படங்களை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் படிக்க
07:49 AM (IST) Apr 06
முதலமைச்சருக்கு கிடைக்கக்கூடிய இந்தப் பாராட்டை அரசியல் அரங்கில் அவர் இன்றைக்கு ஆணித்தரமாக, திட்டவட்டமாக எடுத்து வைத்திருக்கக்கூடிய இந்த முடிவு, டெல்டா விவசாயிகளுக்கு மாத்திரமல்ல, தமிழ்நாட்டிலே இருக்கிற ஒட்டுமொத்த வேளாண் பெருங்குடி மக்கள் அதையும் தாண்டி தமிழ்நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் அவருக்கு, அவருடைய மதிப்பிற்கு இன்றைக்கு பெரிய அளவில் பெருமை சேர்த்திருக்கிறது என்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், எதிர்க்கட்சியினுடைய தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கின்றபோது, முதலமைச்சர் அவர்களைக் குறிப்பிட்டு, இந்த டெல்டாகாரர் தான் மீத்தேன் திட்டத்திற்கு ஆதரவு அளித்தார்.
07:16 AM (IST) Apr 06
திருவள்ளூர் அருகே இளம் ஜிம் பயிற்சியாளருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.