மோடி-டிரம்ப் சந்திப்பின் முடிவுகளும், நிறுவனங்களின் கடைசி காலாண்டு வருவாய் அறிக்கைகளும் சந்தையின் போக்கை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக சந்தைகளில் ஏற்றம் காணப்பட்ட போதிலும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை இன்று சரிவுடன் தொடங்கின.
05:12 PM (IST) Feb 14
இயக்குநரும், நடிகருமான, மிஷ்கின் சினிமாவை விட்டு விலக இருப்பதாக அவரே கூறி இருக்கும் தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
04:32 PM (IST) Feb 14
நாளை சனிக்கிழமை தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதற்கான பட்டியலும் வெளியாகியுள்ளது.
04:28 PM (IST) Feb 14
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் ஆக வலம் வரும் நடிகர் அர்ஜுனின் முதல் காதல் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் காதலித்த பெண் வேறொரு நடிகருடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார். அந்த நடிகை யார் மேலும் படிக்க
04:19 PM (IST) Feb 14
மாநில தகுதித் தேர்வினை வருகின்ற மார்ச் மாதம் 6,7.8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி (CBT) வாயிலாக நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
03:10 PM (IST) Feb 14
03:09 PM (IST) Feb 14
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்குப் பிறகு பனிப்பொழிவு மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மாதத்திலேயே வெயில் வாட்டி வதைப்பதால், ஏப்ரல், மே மாதங்களில் நிலைமை எப்படி இருக்குமோ என மக்கள் கவலை கொள்கின்றனர்.
02:49 PM (IST) Feb 14
2கே லவ் ஸ்டோரி, இன்றைய தலைமுறையினரின் காதலை பற்றி பேசும் இப்படத்தில் ஜகவீர், மீனாட்சி, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், ஜிபி முத்து என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஆனந்த கிருஷ்ணனும், எடிட்டராக தியாகுவும் பணியாற்றியுள்ள இப்படம் இன்று காதலர் தினத்தையொட்டி ரிலீஸ் ஆகி உள்ளது. 2கே லவ் ஸ்டோரி விமர்சனம் படிக்க.
02:12 PM (IST) Feb 14
02:11 PM (IST) Feb 14
01:41 PM (IST) Feb 14
பிப்ரவரி 28ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி அன்றைய தினம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12:37 PM (IST) Feb 14
செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஜெயரரிதா அவருக்கு எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் அளித்தாரோ அதேத அளவுக்கு எடப்பாடி பழனிசாமியும் அவரை மதிப்புடன் நடத்துகிறார். எவ்வளவு சோதனை வந்தாலும் செங்கோட்டையன் அதிமுகவுக்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார் என நம்புகிறேன் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
12:34 PM (IST) Feb 14
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் நில ஆவணங்களை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு பெங்களூரு நகருக்கு சொத்துக்குவிப்பு வழக்கு மாற்றப்பட்டபோது நகைகள் அங்கு கொண்டு செல்லப்பட்டன.
12:28 PM (IST) Feb 14
அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரிகள் விதிப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்க வர்த்தகப் போரின் தாக்கம் இந்தியா போன்ற நாடுகளில் எப்படி இருக்கும்? என்பது குறித்து பல ஊகங்கள் எழுந்துள்ளது.
11:41 AM (IST) Feb 14
அமெரிக்கப் பயணத்தின்போது, பிரதமர் மோடி, அதிபர் டிரம்பைச் சந்தித்து, சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் பிரச்சினை குறித்து விவாதித்தார்.
11:31 AM (IST) Feb 14
நடிகை த்ரிஷா காசுக்காக பொய் சொல்கிறாரா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்க பாடகர் கான்வே வெஸ்ட் சமீபத்தில் கூறி இருந்த கருத்து.
10:45 AM (IST) Feb 14
10:05 AM (IST) Feb 14
பிப்ரவரி 15ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
09:39 AM (IST) Feb 14
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். அக்கட்சி தொடங்கி ஓராண்டு ஆகும் நிலையில், தற்போது நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒய் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன, இந்தியாவில் எத்தனை விதமான பாதுகாப்பு பிரிவு உள்ளன... அவை யார் யாருக்கு வழங்கப்படுகின்றன என்பதை விரிவாக படிக்க
09:28 AM (IST) Feb 14
09:00 AM (IST) Feb 14
அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய்க்கு பல்வேறு இடங்களில் பயணம் மேற்கொள்வார் என்பதால் அவருக்கு Y பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை வழங்கியுள்ளது.
08:55 AM (IST) Feb 14
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இரண்டாவது முறை அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் இந்த அதிகாரபூர்வ சந்திப்பு நடந்தது.
08:48 AM (IST) Feb 14
08:05 AM (IST) Feb 14
தமிழகத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் தொடர் விடுமுறை கிடைத்த நிலையில் பிப்ரவரி மாதம் விடுமுறை கிடைக்காத மாதம். இந்நிலையில் மார்ச் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்பதை பார்ப்போம்.
07:21 AM (IST) Feb 14
2008 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அரசு ஒப்புதல். பயங்கரவாத அச்சுறுத்தலை முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவுடன் இணைந்து எதிர்கொள்வோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
07:17 AM (IST) Feb 14
டிரம்ப் அமெரிக்காவின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பாராட்டுக்குரியது. இந்தியாவின் நலன்களை உயர்வாக வைத்து பணியாற்றுவது பாக்கியம். டிரம்புடன் இணைந்து இரு மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
07:14 AM (IST) Feb 14
பிரதமர் மோடி மிகச் சிறந்த தலைவர் வர்த்தகம் தொடர்பான சிறந்த ஒப்பந்தத்தை உருவாக்குவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
07:12 AM (IST) Feb 14
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை சென்னையில் லிட்டருக்கு ரூ.100.90ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.48ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயுவின் விலை லிட்டருக்கு ரூ.90.50ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.