தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதிகள் கழக வேலைவாய்ப்பு.. தலைமை நிர்வாக அதிகாரி தேவை - முழு விவரம்!

By Ansgar R  |  First Published Aug 15, 2023, 11:56 PM IST

தமிழகத்தில் செயல்படும் தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதிகள் கழகத்தில், தலைமை நிர்வாக அதிகாரியாக பணி செய்ய தற்பொழுது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.


பணி விவரம்

தமிழ்நாடு பணி புரியும் பெண்கள் விடுதிகள் கழகத்தில் தலைமை நிர்வாக அதிகாரி பணி

Tap to resize

Latest Videos

undefined

கல்வித் தகுதி

துறை சார்ந்த படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு படித்து, குறைந்தபட்சம் துறை சார்ந்த ரீதியாக 15 வருட அனுபவம் உள்ள நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியில் சேர விரும்புபவர்களுக்கு 15 வருட அனுபவத்தோடு ஆங்கிலம் மற்றும் தமிழில் அதிகளவிலான ஆளுமை இருக்க வேண்டும்.  

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - எப்படி அப்ளை செய்வது?

இந்த பணியில் சேர அதிகபட்ச வயது வரம்பு 62 என்று குறிப்பிடப்பட்டுள்ளது/

மொத்த காலியிடம் மற்றும் சம்பளம் 

ஒரே ஒரு பதவிக்கான விண்ணப்பங்கள் தற்பொழுது வரவேற்கப்படும் நிலையில், இந்த அரசு வேலையில் தேர்வு செய்யப்படுபவருக்கு மாத சம்பளம் ஒரு லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த www.tnwwhcl.in இணையதள முகவரிக்குள் சென்று இந்த பணிக்கான விண்ணப்ப படிவத்தை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் மாதம் 17ம் தேதிக்குள் தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு நேர்முகத் தேர்வும், எழுத்து தேர்வு வைக்கப்பட்டு வேலை வழங்கப்படும். 

TNHRCE : இந்து சமய அறநிலையத் துறையில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ !!

click me!