
நேற்று ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சாலையில் திடீரென குறுக்கே வந்த லாரியின் மீது மோதாமல் தவிர்க்க, அரசு பேருந்து ஓட்டுனர் வண்டியை வேறு திசையில் மாற்றிய பொழுது கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து அருகில் இருந்த பயணிகள் நிழற்குடையின் மோதி அதை தாண்டி இருந்த ஒரு பெரிய மரத்தில் மோதி நின்றது.
தியாகிகள் ஓய்வூதியம் ரூ.11,000 ஆக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சுதந்திர தின அறிவிப்பு
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூர விபத்தில், பேருந்து நிறுத்த நிழற்குடையில் நின்று கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையின் குறுக்கே லாரி எதிர்பாராமல் வந்த நிலையில் அரசு பேருந்து மோதி இரு பெண்கள் உடல் நசுங்கி பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இவ்விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், "ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், மாயாகுளம் பகுதியில் நேற்று மதியம் அரசு பேருந்தும், தனியார் வாகனமும் எதிர்பாராத விதமாக மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து நிலை தடுமாறி சென்ற பொழுது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் இருந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்".
"உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தல 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என்று அவர் கூறியுள்ளார்.
கோவையில் பெல்லி டான்ஸ் ஆடி அனைவரையும் மகிழ்வித்த மருத்துவர் பகதவத்சலம்