"வெளுத்து வாங்கப்போகுது வெப்பச்சலன மழை!!" - அடித்து கூறும் வெதர்மேன்!!

Aug 1, 2017, 9:23 AM IST



தமிழகத்தை பொறுத்த வரை தென்மேற்கு பருவ மழை ஏமாற்றிவிட்டாலும் வெப்பச் சலன மழை தூள் கிளப்பப்போவதாக வெதர் மேன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவ மழை ஜுன் 1  ஆம் தேதியே தொடங்கிவிட்டாலும் கேரளா மற்றும் தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மட்டுமே ஓரளவு பெய்துள்ளது.

இந்நிலையில் வெதர்மேன் தனது முகநூலில் மழை குறித்த பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அடுத்த இரு வாரங்களுக்கு தென் மேற்கு பருவ மழை வேகம் எடுக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.

வரும் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதிக்குள் கேரளா மற்றும் கேரளாவை ஒட்டிய மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை பெய்ய போகிறது என்றாலும் அது . ஜூன் கடைசி வாரம் அல்லது ஜூலை முதல் வாரம் பெய்த பெரிய மழை போல இருக்காது என கூறியுள்ளார்.

இந்த காரணங்களால் தமிழ் நாட்டில் வெப்ப சலன மழை தூள் கிளப்ப போகிறது என்றும்  தென் மேற்கு பருவ மழை தவறும் போதும், பருவ மழை கோடு ஹிமாலய மழை தொடர்களில் மாட்டி கொள்ளும் போதும் தமிழ் நாட்டில் வெப்ப சலன மழை தூள் கிளப்பும் என்றும் வெதர்மேன் கூறியுள்ளார்.

தென் மேற்கு பருவ மழை தவறியதால் தற்போது கிடைத்துள்ள வெப்ப சலன மழையை அனுபவியுங்கள் என்றும் தமிழ் நாட்டுக்கு இந்த மழை தேவையான ஒன்றும் என தெரிவித்துள்ள வெதர்மேன்  சென்னைக்கும் சீக்கிரம் மழை கிடைக்கும் என தெரிவித்துள்ளார்..