தமிழகம் முழுவதும் காவல்துறையில் காலியாக உள்ள 444 எஸ்.ஐ பதவிகளுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 197 மையங்களில் 43 மூன்றாம் பாலினத்தவர் உள்பட 2,21,213 பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் 10 இடங்களில் நடக்கும் தேர்வை 506 பெண்கள் உள்பட 8,586 பேர் எழுதுகின்றனர்.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் இணையதளம் மூலமாக சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
மேலும் படிக்க:கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டம்... வழிமுறைகளை வெளியிட்டது உயர்கல்வித்துறை!!
இந்நிலையில் முதல் கட்டமாக, சென்னையில் 11 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 197 மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வினை 43 மூன்றாம் பாலினத்தவர் உள்பட 2,21,213 பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 506 பெண்கள் உள்பட 8,586 பேர் எழுதுகின்றனர் மேலும் இந்த தேர்வினை எழுதியவர்களுக்கு பிற்பகலில் முதல்முறையாக தமிழ் மொழி தகுதித்தேர்வு நடக்கிறது. காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு உள்ள நிலையில், இவர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தனியாக எழுத்து தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:அறநிலையத்துறை நடவடிக்கை.. கோவில்களின் வாடகை பாக்கி ரூ. 200 கோடி வசூல்.. அமைச்சர் சொன்ன தகவல்