தமிழகம்.. இன்னும் 5 நாளுக்கு மழை இருக்கு.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!

By Ansgar R  |  First Published Aug 23, 2024, 11:33 PM IST

TN Rain Alert : தமிழகத்தில் எதிர்வரும் 5 நாள்களுக்கு அநேக இடங்களில் மிதமானது முதல் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், காலை முழுவதும் பல இடங்களில் வெயில் வாட்டி வதைக்கும் அதே நேரம், மாலை நேரம் அதிக அளவிலான மழைப்பொழிவு பரவலாக தமிழகத்தில் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் தற்பொழுது வெளியிட்டுள்ள தகவலின்படி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வரை தமிழகத்தின் அனேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலிலும் இடியுடன் கூடிய மிதமானது முதல் பலத்த மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இன்று மாலை திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில், பல இடங்களில் நல்ல மழை பெய்த நிலையில், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழையும் சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Tap to resize

Latest Videos

காத்து வாங்கும் சசிகலா சுற்றுப்பயணம்.! கூவி, கூவி அழைத்தாலும் கண்டு கொள்ளாத தொண்டர்கள்

எழும் நாளை ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதிகளிலும், மன்னார் வளைகுடா பகுதிகளிலும், குமரி கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீச அதிக வாய்ப்புகள் இருப்பதினால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், அவர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நெருங்கும் நிலையில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் குறித்த பயம் மக்களை தானாகவே சூழ்ந்துவிடுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு அதிக மழை தமிழகம் முழுவதும் பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இப்போதே எடுக்கப்பட்டு வருகின்றது.   

ஏழைகளின் உயிரில் துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி? அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அவலம்

click me!