சிவராமனை அடுத்து அவரது தந்தையும் திடீர் மரணமா.? இது கொலையாக இருக்கலாம்- அண்ணாமலை சந்தேகம்

By Ajmal KhanFirst Published Aug 23, 2024, 11:40 AM IST
Highlights

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளி தற்கொலை செய்து கொண்டதோடு, அவரது தந்தையும் விபத்தில் மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

கிருஷ்ணகிரி மாவட்டம். கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில், NCC திட்டத்திற்கு மாணவ, மாணவிகளை தயார்ப்படுத்துவற்கான முகாம் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவிகளும் கலந்து கொண்டனர். அப்போது  இந்த முகாமில் பங்கேற்ற போலியான பயிற்றுநர்கள் அங்கு பயிலும் பள்ளி மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதனை பள்ளி நிர்வாகத்தில் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லாமல் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மறைத்துள்ளனர். ஆனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. 

Latest Videos

பாலியல் வழக்கில் கைதான சிவராமனின் தந்தையும் உயிரிழப்பு! காரணம் என்ன?

குற்றவாளி சிவராமன் தற்கொலை

இதனிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவராமன் போலீஸ் கைது செய்வதற்கு முன்பாகவே தற்கொலை செய்வதற்காக எலி பேஸ்ட்டை இரண்டு நாட்களாக சாப்பிட்டுள்ளார். இந்த தகவலை போலீசாரிடம் தெரிவித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராமன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். முன்னதாக நேற்று இரவு சிவராமனின் தந்தை குடி போதையில் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அடுத்தடுத்து நடைபெற்ற நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவராமனின் தந்தையும் மரணம்

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதவில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு, இன்று காலை உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், அவரது தந்தை அசோக் குமார் என்பவரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. 

15 நாள் தான் கெடு.! அனைத்தையும் முடிக்கனும்- செக் வைத்த ஸ்டாலின்

சந்தேகம் எழுகிறது

இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.

பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

click me!