கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட நான்கு பேரில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் இருக்கிறதா என ஆய்வு செய்த பின்னரே தமிழ்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் 24 x 7 சுழற்சி அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மக்களே உஷார் வேகமாக பரவும் உயிர் கொல்லி டெங்கு; பொறியல் கல்லூரி மாணவி பலி
அந்த வகையில் கேரளாவில் இருந்து குமரி வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழையும் முக்கிய சோதனை சாவடிகளான களியக்காவிளை, கண்ணுமாமூடு, நெட்டா போன்ற சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
திடீரென தரிகெட்டு ஓடிய லாரி வீட்டுக்குள் புகுந்து விபத்து; ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்