புதுவையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பொறியியல் கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி குருமாம்பட்டு கூட்டுறவு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆதிமூலம். இவரது மகள் காயத்ரி (வயது 19). இவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார். கடந்த இரண்டு தினங்களாக இவர் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
அவரை மூல குளத்தில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவிக்கு டெங்கு இருப்பதாக தெரிவித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய குடிமகன்; மது அருந்த பணம் தர மறுத்ததால் ஆத்திரம்
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைய தொடங்கவே மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த காயத்ரி இன்று காலை சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது. மேலும் காயத்ரியின் இறப்பு சான்றிதழிலும் மருத்துவர்கள் டெங்கு காய்ச்சலால் இறந்ததாகவே தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மேலும் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மாணவியின் உடன்படிக்கும் மாணவ, மாணவிகள் வீட்டிற்கு வந்து திரண்டு மாணவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.