புதுச்சேரியில் தன்னை மிரட்டுபவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள தாமே நாட்டு வெடிகுண்டு செய்து அதனை ரயில் நிலையத்தில் வீசி சோதனை நடத்திய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ரவிகாந்த் ஜான்மேரி என்கிற பரத் (வயது 19).துக்க நிகழ்விற்காக நேற்று முன் தினம் வாணரப்பேட்டைக்கு வந்த இவர் நிகழ்ச்சி முடிந்து செல்லும் போது நேற்று அதிகாலை ரயில் நிலையத்தின் 4 வது நடைமேடையில் வாணரப்பேட்டை சந்திப்பில் நாட்டு வெடி குண்டை வீசி விட்டு சென்றார்.
இது குறித்து ஒதியன்சாலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பரத்தை கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு முன் அரியாங்குப்பத்தில் ரௌடி அஸ்வின் என்பவர் வெடி குண்டு வீசியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது இறுதி ஊர்வலத்தில் அஸ்வினின் கூட்டாளியான பரத் (19) பட்டாசு வெடித்து வந்தார். ஊர்வலத்தில் வெடித்த பட்டாசுகளின் மீதியை கொண்டு நாட்டு வெடி குண்டை தானே தயாரித்து வீசியுள்ளார். காரணம் வாணரப்பேட்டைக்கு வந்து ஊருக்குள் அடிக்கடி மோதல் வந்ததால் வாணரப்பேட்டையில் இருந்து வெளியேற்றப்பட்டார். 3 மாதங்களாய் ஊருக்குள் நுழையாமல் சாரம் பகுதியில் தங்கி இருந்த பரத் தன்னை வெளியேற்றியவர்களை மிரட்ட வெடி குண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
பள்ளி மாணவர்களின் நெஞ்சத்தில் ஜாதி தீயை பற்றவைக்கும் பெற்றோர்; பட்டியலின பெண் சமைப்பதற்கு எதிர்ப்பு