ஆளுநருக்கு காத்திருக்க வேண்டியதில்லை; தமிழக அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசாணை வெளியிடுகிறது?

By Asianet Tamil  |  First Published Jun 16, 2023, 1:45 PM IST

ஆளுநருக்காக காத்திருக்காமல் தமிழக அரசுக்கு இருக்கும் தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சரவை மாற்றத்திற்கான அரசாணையை வெளியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
 


தமிழக மின்துறை மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கைது செய்தபோதே இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதயத்தில் ரத்த நாள அடைப்பு இருப்பதால், இவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் இஎஸ்ஐ மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் இவரது மனைவி ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். அதில், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியை அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றலாம் என்றும் ஆனால் தொடர்ந்து அவர் நீதிமன்றக் காவலில் இருப்பார் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பதற்கு அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இன்று வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Latest Videos

undefined

செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது ஏன்.? மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்

இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாலும், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாலும் அவரால் அமைச்சர் பொறுப்பில் நீடிக்க முடியாது என்பதால் அவரது இலாக்காக்களை பிரித்து கொடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வையும் வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது என்றும் முடிவு செய்தனர். 

அதற்கான ஒப்புதல் பெறுவதற்கு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கைது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும், கைது குறித்தும் தனக்கு தெரிவிக்கவில்லை என்றும் கூறி பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். இரண்டாவது முறையாக ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார். இன்னும் அதறகான பதில் கிடைக்கவில்லை.

அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் ஆட்சி போய்விடும் என அஞ்சி பதறுகிறார் ஸ்டாலின்.! -இபிஎஸ்

இந்த நிலையில், ஆளுநரின் பதிலுக்கு காத்திருக்க வேண்டியதில்லை. தமிழக அரசுக்கு தனக்கு என்று இருக்கும் தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சரவையை மாற்றலாம் என்று ஏற்கனவே நேற்று அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருந்தார். ஆளுநர் அனுமதி கொடுக்கவில்லை என்றாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதன் அடிப்படையில், கூடுதலாக யாருக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்படும் என்பது தொடர்பான அரசாணையை வெளியிட தமிழக அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.  

click me!