செந்தில் பாலாஜி ஐசியூவில் இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு முன்பு செய்ய வேண்டிய சோதனைகள் செய்யப்பட்டுவருவதாகவும், இந்த சோதனையின் அடிப்படையில் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆஞ்சியோ சோதனை மேற்கொண்டனர். அப்போது இருதய பகுதியில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக நீதிமன்றத்தில் அனுமதி கோரிய நிலையில் நீதிமன்றமும் அனுமதி அளித்தது. இதனையடுத்து நேற்று இரவு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களுக்கு பின்னரே அறுவை சிகிச்சை!
தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜி
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் உடல் நிலை தொடர்பாகவும், அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்படும் சிகிச்சை குறித்தும் காவேரி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், அமைச்சர் செந்தில்பாலாஜி ஜூன் 15-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரை இதய நோய் மூத்த மருத்துவர் ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழுவினர்சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை எப்போது
தற்போது அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு செய்ய வேண்டிய பரிசோதனைகள் செய்யப்பட்டுவருவதாகவும், இந்த சோதனையின் முடிவின் அடிப்படையில் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி, ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் கொண்ட குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை கூறியுள்ளது.
இதையும் படியுங்கள்