போடி மதுரை பயணிகள் ரயில் மற்றும் போடி முதல் சென்னை சென்ட்ரல் வரையிலான ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி எம்பி ஓ பி ரவீந்திரநாத் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
போடி- மதுரை இடையான மீட்டர் கேஜ் ரயில் பாதை அகற்றப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக போடி, மதுரை இடையான ரயில் சேவை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த வருடம் மே மாதம் தேனி - மதுரை இடையான முதல் கட்ட அகல ரயில் பாதை பணிகள் முடிவு பெற்று பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.மேலும் போடி, தேனி வரையிலான ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு கட்ட ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது.
undefined
இந்நிலையில் நேற்று இறுதி கட்ட சோதனை ஓட்டத்திற்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் விரைவு ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது போடி முதல் மதுரை வரையிலான முழு பயணிகள் ரயில் சேவை திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. போடி ரயில் நிலையத்தில் போடி - மதுரை இடையிலான ரயில் சேவை மற்றும் போடி - சென்னை இடையேயான ரயில் சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
MDMK Vaiko Condemns: “நீங்கள் முதல்வரல்ல ஆளுநரே” மத்திய அரசின் பணியாளர் மட்டும் தான் - வைகோ ஆவேசம்
இந்த தொடக்க நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ பி ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து இரண்டு ரயில் சேவையை தொடங்கி வைத்தனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு போடியில் இருந்து பயணிகள் ரயில் சேவை இயக்கப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் குவிந்து ஆரவாரத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கொடைரோடு ரயில் நிலையத்தில் இனி இந்த ரயில்கள் நின்று செல்லும்; அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்
போடி முதல் மதுரை வரையிலான முன்பதிவு இல்லா பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. போடி முதல் சென்னை சென்ட்ரல் வரையிலான ரயில் சேவை வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு கிழமைகளில் மூன்று நாட்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் சென்னை சென்ட்ரல் முதல் போடி வரையிலான ரயில் சேவை வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்படுகிறது.