தேனியில் நீதிமன்றம் அருகே பெண் மீது காரை ஏற்றி கொல்ல முயற்றி; சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

By Velmurugan s  |  First Published Jun 13, 2023, 9:51 AM IST

நீதிமன்ற வளாகத்தின் அருகில் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பெண்ணை காரை ஏற்றி கொல்ல முயற்சி, உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் - மணிமாலா தம்பதிகளுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் கணவன், மனைவி இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கணவரிடம் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு போடி  ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மணிமாலா வழக்கு தொடுத்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் நேற்று மணிமாலா, ரமேஷ் ஆகிய இருவரும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். மாலையில் வழக்கு விசாரணை முடிந்து தனது ஊருக்கு செல்ல நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே வந்த மணிமாலா மீது ரமேஷின் காரை ஓட்டி வந்த பாண்டித்துரை என்ற இளைஞர் மணிமாலா மீது மோதி கொலை செய்யும் முயற்றியில் ஈடுபட்டார். 

எனது மற்றொரு கண்ணும் பார்வை பறிபோகும் முன்... பிரதமர் மோடிக்கு சாந்தனின் தாயார் கோரிக்கை

இதனால் பலத்த காயமடைந்த மணிமாலாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து காரை ஓட்டி வந்து மோதிவிட்டு தப்பி ஓட முயன்ற பாண்டித்துரை, மணிமாலாவின் கணவர் ரமேஷ், இவர்களுடன் வந்த முருகன் ஆகிய மூவரையும் கைது செய்த காவல் துறையினர் போடி உட்கோட்ட கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

https://tamil.asianetnews.com/video/tamilnadu-thirupur/people-are-displeased-at-tirupur-bus-stand-because-drunk-men-are-lying-obscenely-rw645t

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் இருந்து மணிமாலாவை காரை ஏற்றி கொலைசெய்ய முயன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!