முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனைவி யார் தெரியுமா? யார் இந்த பீலா ராஜேஷ்?

By Raghupati RFirst Published Jun 16, 2023, 12:25 PM IST
Highlights

பெண் எஸ்.பி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த காலத்தில், சரியாக 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம் - ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது  பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்.பிக்கு அவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் பெண் எஸ்.பி காரின் சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணன் ஆகியோர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

Latest Videos

அதனை தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பராணி,  குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு (354 A, 341 506 4(F) women harassment ) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில் 3 ஆண்டுகள் சிறை ஆண்டு சிறை  தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து,  பெண் எஸ்பியை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மனைவி பீலா ராஜேஷும் ஒரு அரசு அதிகாரி ஆவார். அவர் யாரென்று தெரியுமா? யார் இந்த பீலா ராஜேஷ்? இங்கு பார்க்கலாம். பீலா ராஜேஷின் அம்மா ராணி வெங்கடேசன் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம் ஆகும். நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட ராணி வெங்கடேசன், 2006 சட்டமன்றத் தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார்.

சிபிஐயின் அடுத்த குறி முதல்வர் ஸ்டாலின்.. 200 கோடி விவகாரத்தை கிளப்பும் அண்ணாமலை - மீண்டும் பரபரப்பு

2016 தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தேர்தலில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதனிடம் தோல்வியைத் தழுவினார். பீலாவின் அப்பா வெங்கடேசன் - ராணி வெங்கடேசன் தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். 1969ல் பிறந்த பீலா படித்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்த பீலா, 1989 ஒடிசா கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான ராஜேஷ் தாஸை காதலித்து கரம்பிடித்தார்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த தம்பதிகளுக்கு பிங்கி, ப்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். பிறகு இந்திய குடிமைப் பணிகள் தேர்வெழுதி 1997 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் ஆனார். முதலில் இவருக்கு பீகார் மாநில கேடர்தான் ஒதுக்கப்பட்டது. ஐ.பி.எஸ் அதிகாரியான தன் கணவர் தமிழகத்தில் பணிபுரிவதை மேற்கோள்காட்டி 2000 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு தன் பணியிடத்தை தற்காலிகமாக மாற்றிக்கொண்டார்.

பிறகு மீண்டும் 2003 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். பிறகு நீண்ட வருடத்துக்கு பிறகு தமிழ்நாடு அரசில் சேர்ந்தார். கடந்த அதிமுக ஆட்சியில், கொரோனா காலகட்டத்தின் போது இவர் சுகாதாரத்துறையின் செயலாளர் ஆக பீலா ராஜேஷ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த டார்கெட் அமைச்சர் சிவசங்கர்.. ஜூனியர் செந்தில் பாலாஜி - திமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் அண்ணாமலை

click me!