தக்காளி விலையை அதிரடியாக குறைத்த தமிழக அரசு.. எவ்வளவு தெரியுமா ?

By Raghupati RFirst Published Sep 6, 2022, 9:55 PM IST
Highlights

தக்காளியின் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளின் வரத்தானது கிடுகிடுவென அதிகரித்துள்ளது.சென்னையின் பிரதான காய்கறி சந்தையான கோயம்பேட்டுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து காய்கறி வரவழைக்கப்பட்டாலும் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களையே சார்ந்திருக்கிறது. 

இதனால் அண்டை மாநிலங்களில் மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்போது, அதன் எதிரொலி காய்கறி வரத்திலும் பாதிப்பது இயல்பு. அந்தவகையில் தற்போது தக்காளி விலையில் இந்த பாதிப்பு எதிரொலித்து இருக்கிறது. இதனால் தக்காளியின் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..கடைசியில் 132 கி.மீ வேகம்.. சைரஸ் மிஸ்திரி இறப்புக்கு இந்த பெண் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

25 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ரூபாய் 450 முதல் 500 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஒரு பெட்டி 900 ரூபாய் அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனால் கடைகளில் கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி தற்போது கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில இடங்களில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பருவமழையின் காரணமாக தக்காளி வரத்து குறைவாக இருப்பதாகவும், இதனால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாகவும், மூர்த்தா தினம், ஓணம் பண்டிகை காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு அதிக அளவு டிமாண்ட் உள்ளதாகவும் வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..ஒன்றிணைவோம் வா.. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்.! எடப்பாடியா? பன்னீரா? குழப்பத்தில் ர.ரக்கள்

இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்கு தக்காளி விற்பனை செய்யும்பொருட்டு கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்யப்படும்.

அதனை சென்னையில் செயல்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டி.யு.சி.எஸ்.). சிந்தாமணி நாம்கோ மற்றும் காஞ்சி மக்கள் அங்காடி முதலிய கூட்டுறவு பண்டகசாலைகளால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி தற்போது ரூ.40 முதல் 42 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொது மக்கள் இதை வாங்கி பயனடையுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..முதலிரவில் மனைவிக்கு கன்னித்தன்மை டெஸ்ட் எடுத்த கணவன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!

click me!