
அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று நலம் பெற்ற சிறுமி டானியாவுக்கு வீட்டுமனை பட்டா ஒன்றையும், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டதின் கீழ் வீடு கட்டிக் கொள்வதற்கான அனுமதி ஆணையையும் இன்று வழங்கியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த, ஆவடி வட்டத்தில் உள்ள மோரை பகுதியை சேர்ந்த தம்பதிகள் தான் ஸ்டீபன் ராஜ் மற்றும் சௌபாக்கியம். இவர்களுக்கு 9 வயதில் டானியா என்ற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் அரிய வகையைச் சேர்ந்த ஒரு முகச்சிதைவு நோயால் இவர் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
இதையும் படியுங்கள் : "அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்".. ஆளுநருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!
பெரிய அளவில் பணத்தை செலவு செய்தும் இந்த நோய்க்கு தீர்வு கிடைக்காமல் அவர் பெரும் அவதிப்பட்டு வந்தார். மேலும் தொடர்ந்து சிகிச்சையை மேற்கொள்ள வசதி இல்லாத காரணத்தினால் தங்கள் மகளின் இந்த அறியவகை நோய்க்கு உதவிட ஆவணம் செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பெற்றோர் கடிதம் எழுதினர்.
இந்நிலையில் உடனடியாக அந்த சிறுமிக்கு உதவி செய்திட அந்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தார் முதல்வர் மு.க ஸ்டாலின். இதனை எடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி முக- சீரமைப்பு அறுவை சிகிச்சை இந்த சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று சிறுமியை கண்டு நலம் விசாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று 30.6.2023 அன்று, முதலமைச்சரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமான சிறுமிக்கு சுமார் ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிலத்திற்கான பட்டாவையும். அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டிக் கொள்ளவும் அனுமதி ஆணையினை வழங்கினார்.
இதையும் படியுங்கள் : உக்ரைன் முதல் கூலிப்படை வரை.. ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசியது என்ன?