சொத்து பிரச்சினை காரணமாக சொந்த தம்பியே அண்ணனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயற்சி செய்ததாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஜம்புத்துறை கோட்டை ஊராட்சி அழகம்பட்டியில் வசித்து வருபவர் முனியாண்டி என்ற பெரிய முனியாண்டி. இவர் இதே பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது உடன் பிறந்த சகோதரர் முனியாண்டி என்ற சின்ன முனியாண்டி. இவர்களுக்கு இதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தை இருவரும் பிரித்துக் கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் அண்ணன், தம்பி இருவரும் பகலில் ஒருவரும், மாலையில் ஒருவரும் தண்ணீர் பாய்ச்சுவது என்று பேசி தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். மேலும் விவசாயம் தோட்டம் பிரிக்கும் பொழுது அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. இதன் காரணமாக இருவரும் பேசிக் கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.
undefined
செந்தில் பாலாஜியின் நீக்கத்தை ஆளுநர் வாபஸ் பெறவில்லை - அண்ணாமலை விளக்கம்
இந்நிலையில் கடந்த 26ம் தேதி பெரியமுனியாண்டி தனது விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற பொழுது அவரை கொலை செய்யும் நோக்குடன் சின்ன முனியாண்டி அவரது மகன்கள், மருமகன் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் மோட்டார் ஸ்விட்ச் பாக்சில் மின்சார வயரை செலுத்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அன்று தரையில் இருந்து வயர் சென்றதைப் பார்த்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும், ஆனாலும் நீ உயிரோடு இருக்கக் கூடாது என்று கூறி தனது உடன் பிறந்த அண்ணனை தம்பி சின்ன முனியாண்டி மற்றும் அவரது மகன், மருமகன்கள் சேர்ந்து கையிலும், காலிலும் கத்தியால் குத்தியதாகவும், இதனால் காயம் ஏற்பட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து பின்னர் அங்கிருந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஐந்து நாட்கள் ஆகியும் தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து புகார் வழங்க வந்துள்ளேன் என்று பெரிய முனியாண்டி கூறினார்.
கடனை கட்டுவதில் தாமதம்: அடாவடி செய்த நிதி நிறுவன ஊழியர்கள் முன் கூலி தொழிலாளி தற்கொலை
மேலும் தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் தனது சகோதரர் சின்ன முனியாண்டியால் ஆபத்து ஏற்படலாம் ஆகவே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.