Latest Videos

பாத்ரூம் போகும்போது, வரும்போதெல்லாம் இனி யாரும் பேசமாட்டார்கள்: பாஜக தலைவர் அண்ணாமலை காட்டம்

By SG BalanFirst Published Jun 11, 2024, 8:39 PM IST
Highlights

"பாத்ரூம் போகும்போது, வரும்போதெல்லாம் இனி யாரும் பேசமாட்டார்கள். இனி பா.ஜ.க. அலுவலகத்தில் மட்டும்தான் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்" என்று அண்ணாமலை கூறினார்.

இனி பா.ஜ.க. அலுவலகத்தில் மட்டும்தான் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கட்சியில் உள்ள அனைவரும் கட்சி அலுவலகத்தில் தான் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவை விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களுக்குப் பதில் அளிக்காமல் சென்று காரில் ஏறிக்கொண்டார். பின், "பாத்ரூம் போகும்போது, வரும்போதெல்லாம் இனி யாரும் பேசமாட்டார்கள். இனி பா.ஜ.க. அலுவலகத்தில் மட்டும்தான் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்" என்று கூறினார்.

இது தொடர்பாக அலுவலக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட அண்ணாமலை, இனிமேல் வாழ்க்கையில் எப்போதும் கோவை விமான நிலையத்தில் பேட்டி இல்லை எனவும் தெரிவித்தார்.

எலான் மஸ்க் பதிவிட்ட தமிழ் பட மீம்! ஆப்பிள் - சாட்ஜிபிடி கூட்டணி மீது குவியும் விமர்சனம்!

விமானப் பயணங்கள் மேற்கொள்ளும்போது அண்ணாமலை அடிக்கடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவது வழக்கம். போகும்போதும் வரும்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுப்பார். இதைப் பற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிண்டல் அடித்தும் பேசியிருக்கிறார்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக அண்ணாமலை தலைமையில் களம் கண்டு, அனைத்து தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது. இந்தப் படுதோல்வியில் கோவை தொகுதியில் அண்ணாமலையும் தோற்றார். இந்தத் தோல்வியின் எதிரொலியாக அவரது தலைவர் பதவியை பாஜக பறிக்கக்கூடும் என்றும் பேசப்படுகிறது.

இந்தத் தேர்தலுக்கு முன் பாஜக - அதிமுக இடையே இருந்த கூட்டணி அண்ணாமலையின் பேச்சால்தான் உடைந்தது என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட அதிமுக தலைவர்களும் வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.

பட்டைய கிளப்பும் மைலேஜ்! லிட்டருக்கு 73 கி.மீ.! சாமானியனின் கனவு பைக் இதுதான்!!

click me!