பிரதமர் மோடியை தவறாக விமர்சித்த திமுக எம்பி தயாநிதி மாறனை கைது செய்ய வேண்டும் எனவும், எம்பி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகருக்கு தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கான புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு என எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதற்கு தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்கின்ற வார்த்தையே இல்லை, எப்போதும் இடம்பெற்றிருக்கும் திருக்குறளும் இல்லையென கூறியிருந்தார். இதனையடுத்து தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து திமுக சார்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் கலந்து கொண்டார்.
Anbumani : இதற்கெல்லாம் திமுக அரசு தான் காரணம்.. உடனே பதவி விலகனும்.! இறங்கி அடிக்கும் அன்புமணி
மோடியை விமர்சித்த தயாநிதி மாறன்
அப்போது பேசிய அவர் நான் தமிழனாக பிறக்க முடியவில்லையே, அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் தமிழராக பிறக்க வேண்டும்.தமிழ் மொழி பேச வேண்டும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி கூறினார். ஆனால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை இந்த கேடி மோடி என விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி, கேடி' என்று மோடியை சொல்கிறார் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் யார் கேடி? சட்ட விரோதமாக 764 தொலைபேசி இணைப்புகளை தனது வீட்டில் இணைத்துகொண்டு சட்ட விரோத தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி பல கோடி ரூபாய் அரசாங்கத்தின் பணத்தை கொள்ளையடித்த கொள்ளைக்கார கூட்டம் பிரதமரை கேடி என்று சொல்வது அயோக்கியத்தனம்.
தயாநிதி மாறனை கைது செய்யுங்கள்
முதல்வர் ஸ்டாலினை இது போன்று பேசியிருந்தால் தமிழக காவல் துறை அடுத்த நொடியே கைது செய்து சிறையிலடைத்திருக்கும். பிரதமர் குறித்து இந்த வார்த்தையை பிரயோகம் செய்தது குற்றச் செயல் மட்டுமல்ல, அரசுக்கு எதிரான, தேசத்துக்கு எதிரான குற்றம். மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக இந்த நபரை கைது செய்ய உத்தரவிட வேண்டும்.
பிரதமரை தவறாக பேசிய தயாநிதி மாறனை தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு, அவரை கைது செய்து சிறையிலடைக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தயாநிதி மாறன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.