குறையே சொல்ல முடியாத ஆட்சியா? குறைய தவிர எதையுமே சொல்ல முடியலயேப்பா - சீமான் ரைமிங் அட்டாக்

By Velmurugan s  |  First Published Jul 29, 2024, 12:33 PM IST

ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியர்கள் பதவி உயர்வைப் பறிக்கும் அரசாணை 243ஐ கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களை சரிசெய்ய வேண்டும், உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி வழியில் அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

Anbumani : இதற்கெல்லாம் திமுக அரசு தான் காரணம்.. உடனே பதவி விலகனும்.! இறங்கி அடிக்கும் அன்புமணி

Tap to resize

Latest Videos

அப்படி போராட்டத்தை முன்னெடுத்த தொடக்கக்கல்வி ஆசிரியர் பெருமக்களைக் கொடுங்குற்றவாளிகள் போல கைது செய்யும் திமுக அரசின் கொடுங்கோன்மைச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளைத்தானே ஆசிரியர் பெருமக்கள் நிறைவேற்றக் கோருகிறார்கள்? 

ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் அதைக்கூட திமுக அரசால் நிறைவேற்ற முடியாதா? உரிமை கேட்டு அமைதி வழியில் போராடுவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமையாகும். அதைக்கூட அனுமதிக்க மறுப்பதற்குப் பெயர் தான் திராவிட மாடலா? கருத்துரிமையைக் காலில் போட்டு மிதித்து, போராடும் ஆசிரியர்களை சமூக விரோதி போல கைது செய்வதுதான் சமூகநீதி அரசா? இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா?

பிளடி ராஸ்கல் நாடகமா ஆடுற? நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் - மருத்துவமனையில் பரபரப்பு

திமுக அரசு, கைது செய்யப்பட்ட ஆசிரியர் பெருமக்களை எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவித்து, அவர்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தரவேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!